திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் ! பக்தர்களின் பாதுகாப்பு விசயத்தில் கோட்டைவிட்ட கோவில் நிர்வாகம் !
திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் ! பக்தர்களின் பாதுகாப்பு விசயத்தில் கோட்டைவிட்ட கோவில் நிர்வாகம் ! ஜூலை-21, ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களை ஒழுங்குப் படுத்தும் பணியில் இருந்த, உதவி ஆய்வாளர் மாரியப்பசாமி அவமரியாதையாக பக்தர்களை நடத்தியதும்; அவரது அநாகரிப்பேச்சும் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வயது முதிர்ந்த தம்பதியினரை அநாகரிகமாகப் பேசியதோடு, அவர்களை தர தரவென்று இழுத்து அனைவரது முன்னிலையிலும் அவமானப்படுத்தியிருக்கிறார். மேலும், கைக்குழந்தைகளுடன் கடும் வெயிலில் வெறும் காலுடன் பல மணி நேரம் நின்று கொண்டிருந்த நிலையில்; அதனை கண்டும் காணாமல் இருந்ததோடு, ”செத்தால் சாகட்டும்” என மிகக் கேவலமாகவும் பேசியிருக்கிறார், உதவி ஆய்வாளர் மாரியப்பசாமி.
“முருகனே பார்த்துக் கொள்வான்” என்று மனம் நொந்து, முருகனை தரிசிக்காமலேயே திரும்பியிருக்கின்றனர், அந்த வயதான தம்பதியினர். இதுபோன்ற விஷேச நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்ற முன் அனுபவம் இருக்கும் நிலையில், சிக்கல் ஏதுமின்றி அவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் முன்னேற்பாடுகளை செய்யாததோடு, போதிய பாதுகாப்புக்கு போலீசாரை நிறுத்தாததும்தான் பிரச்சினை என்கிறார்கள்.
-ஜோஷ்.