சமீபத்தில் சிறப்பான கேட்டல் அனுபவத்தைத் தந்து கொண்டிருக்கும் பாடல் குறித்த வர்ணனை ! ஓ ராயா…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சமீபத்தில் சிறப்பான கேட்டல் அனுபவத்தைத் தந்து கொண்டிருக்கும் பாடல் குறித்த வர்ணனை

பாடல் – ஓ ராயா…
பாடியவர் – கான்வயா துரைசாமி
எழுதியவர் – தனுஷ்
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

யாம் பெறும் இன்பத்தை
அனைவரும் பெறவே இந்தப் பகிர்வு

ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை மாறிவரும் காலத்துக்கு ஏற்ப தகவமைத்து வரும் இசையமைப்பாளர் ஆவார்.
அதனால் தான் இத்தனை போட்டி நிறைந்த திரை இசைத் துறையில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருந்தும் தற்கால சோசியல் மீடியா யுகத்திலும் ட்ரெண்டிங் ஆக முடிகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அவரது 1990 கால இசை என்பது
அவரது பாடல்களை திரைப்படத்தோடு இல்லாமல் தனியாகக் கேட்டாலும் சிறப்பாகத் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் பல குரல்கள் பல வாத்தியங்கள் புதிதான இடையிசைக் கோர்ப்புகள் என அந்த ஃபார்மேட்டில் இருந்தது

2000களில் தொடக்கத்தில்
ஆண்ட்ரூ லாய்ட் வெபர்
சீன மொழித் திரைப்படம் என்று இந்தியாவை விட்டு வெளியேறி உலக இசைக்குள் நுழைந்தது
அவரது எண்ணங்களில் பல மாற்றங்களை விதைத்திருக்க வேண்டும்.

அதற்கடுத்த பத்தாண்டுகளில் அவரது இசையில்
அவரது இசைக் கோர்ப்பு பாணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

அதற்கடுத்து ஹாலிவுட் சென்றார்
அங்குள்ள படங்களுக்கு இசையமைக்கும் போது
கற்றவற்றைக் கொண்டு

பல்லவி இடையிசை சரணம் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தார்

அவரது ஆஸ்கார் கிராமிக்குப் பின்பான இசை கோர்ப்புகள் அந்த டெம்ப்ளேட்டை பெரும்பாலும் உடைத்து விட்டன.

இசை என்பது பிரவாகம் எடுத்து வரும் சுனை போல நதி போல அருவி போல எந்த வரைமுறையும் இல்லாமல் இருக்கட்டும்

இதில் துருத்திக் கொண்டு இடையிசை இருக்க வேண்டிய அவசியமில்லை
இதில் பல குரல்களை வலிந்து வைக்கத் தேவையில்லை
பல இசைக்கருவிகளை கட்டாயம் ஒலிக்க வைக்க வேண்டும் என்றில்லை

மாறாக
ஒரு குரல்
ஒரு சில இசைக்கருவிகள்
கோரஸ்
ஸ்ட்ரிங் ஆர்கெஸ்ட்ரா
கொஞ்சம் ரிதம்
இவற்றை வைத்துக் கொண்டே
நாம் கடத்த வேண்டிய உணர்வுகளைக் கடத்த முடியும் என்று நிரூபித்து வருகிறார்

இந்தப் முயற்சியில் வெற்றியும் பெற்று வருகிறார்.

அத்தகைய ஒரு பாடல் தான்

“ஓ ராயா”

பாடலைக் கேட்டுக் கொண்டே இந்த வர்ணனையை கேளுங்கள்.

இசை குறித்த வர்ணனை என்பதால் நொடிப்பொழுதில் மாறும் தாளங்கள் இசைக்கருவிகள் குறித்து வர்ணனை இடம்பெறும்.

இந்தப் பாடலில்
“ஸ்ட்ரிங்ஸ்” எனும்
நரம்பிசைக் கருவியின் பல்வேறு ஒலி வடிவங்களை

“ரிதம்” தோலிசைக் கருவியின் பல்வேறு ஒலி வடிவங்களை

ஆர்கெஸ்ட்ராவையும் கோரஸையும் உபயோகப்படுத்தியிருக்கும் பாங்கு

கானவ்யா & ஏ.ஆர்.ரஹ்மானின் குரல் வடிவங்கள்

இதை வைத்து செய்திருக்கும் “லேயரிங்”
ஆகியவற்றைக் கவனிக்கவும்.

இந்தப் பாடலில்
“சஸ்டெய்ண்” எனும் நீட்டிப் பாடுவதை
பாடலின் சுவையைக் கூட்ட ஏஆர்ஆர் எப்படிப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் பார்ப்போம். சஸ்டெய்ன் வரும் இடங்கள் அனைத்தும் பல நெடில் எழுத்துகளால் சுட்டுவேன்.

00:00 பாடல் தொடங்குவது
00:10 வரை

இரண்டு நரம்பிசைக் கருவிகள்

ஒன்று கிடார் – பேசிக் ரிதம் செட் செய்ய
நடு நடுவே
மற்றொன்று இரு இரு நொடிகள் உகுலேலின் சீண்டல்கள் (?)

இரண்டு நரம்பிசைக் கருவிகளாக இருப்பினும்
இரண்டும் வெவ்வேறு ஒலிகள்

00:11 முதல் 00:40 வரை இதே இரண்டு நரம்பிசைக் கருவிகளின் பேக் அப் ரிதமில்

சரியாக
00:11 இல் கானவ்யா
ஏக்கத்துடனும் சோகத்துடனும்

“போகிற பாதை தெரியலையே
யார் தந்த விதியோஓஓஓஓ?( சஸ்டெய்ண் -1)

என்று ஆரம்பித்து
அடுத்த வரிகளிலேயே நம்பிக்கையைத் தூவுகிறார்

“தூரத்தில் வரும் வெளிச்சமெல்லாம்
நீ செல்லும் வழியோஓஓஓ? ( சஸ்டெய்ண்-2)

இங்கு பரந்து கெடக்கும் பூமி
உனக்கும் தந்ததய்யா..

இங்கு இருக்கும் அத்தன சாமியும்
உனக்கும் சொந்தமய்யா…

என்று முடிக்கும் போது 00:40 ஆகியிருக்கும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

உன் கவலையெல்லாஆஆஆஆம்…( ச்ஸ்டெய்ண்-3)

என்று கானவ்யா நீட்டும் போது பின்னணியில் நரம்பிசைக் கருவியின் ஒலியில் மாற்றத்தைக் கவனியுங்கள்.

“உன் கவலையெல்லாம் தூசா பறக்கட்டும் ராசா
இனி உனக்குனு ஒரு காலம்
பொறக்கட்டும் ராசாஆஆ”( குட்டி சஸ்டெய்ண் – 4)
என்று உச்சஸ்தாயி எடுத்து பாடி முடிக்கும் போது 00:55 ஆகியிருக்கும்

இப்போது
பின்னணியில் வயலின் ஆர்கெஸ்ட்ரா நமக்கு முன்
காலம் சற்று நின்று விடுமாறு
ஒரு வெளி அமைத்துக் கொடுக்க

கூடவே தோலிசைக் கருவி இதயத்துடிப்பு போல சேர்ந்து கொள்ள

அங்கே
“ஓ ராயாஆஆஆஆஆ
ஓ ராயாஆஆஆஆஆ” ( பெரிய சஸ்டெய்ண்-5) என்று கமகமெடுத்து ஏ.ஆர். ரஹ்மான் பாடும் போது

ஏமாற்றம், வலி, பரிவு, சோகம் ஆகிய உணர்வுகள் வெளிப்படுவதை உணர முடியும்.

1:10 முதல் 1:20 வரை
பின்னணியில் கேட்கும் அந்த இசைக்கருவி எதுவென்று தெரியவில்லை. நீரை பல்வேறு அளவுகளில் நிரப்பி தாளமடிக்கும் ஜலதரங்கமாக இருக்கலாம்.. ஆனால் விநோதமான ஒலி… காட்டுக் குருவிகளின் கீச்சை நினைவுப்படுத்த

01:20இல் கானவ்யா பாடலுக்குள் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறார்…

“ஓஓஓ( சஸ்டெய்ண்-6) குருவியே
பாட்டு சொல்ல வருவியா?

ஓஓஓ( சஸ்டெய்ண்- 7) அருவியே
தூங்க வைக்க விழுவியா?

01:20 முதல் 1:28
தனது ஆசையை வினாவாக எழுப்பி கானவ்யா பாடும் போது பிண்ணியில்
கீபோர்டு கொண்டு
ஒரு பேக் அப் ரஹ்மான் செய்திருப்பார் கேட்கத் தவறிவிடாதீர்கள்.

1:29 இல்

சிறகுகள் முளைக்குமுன்னே
பறக்கணும் கண்ணே..

பறக்குற திசையில் எல்லாம்
ஜெயிக்கணும் கண்ணேஏஏஏஏ… ( சஸ்டெய்ண் -7)

காணும் கனவு எல்லாம்
உள்ளங்கையில் வரும்..
வானமே மண்ணில் வரும்
கண்ணே கண்ணேஏஏஏ…
( சஸ்டெய்ண் – 8)

ஊரு
ஒறவும் இல்ல
யாரும் சொந்தமில்ல
வேர்வை தான் கூட வரும்
கண்ணே கண்ணேஏஏஏ ( சஸ்டெய்ன் – 9 )

இதில் மேற்சொன்ன மூன்று முறைகளும்
“கண்ணே கண்ணேஏஏஏ” என்று கானவ்யா நீட்டும் போது பின்னணியில் வயலின் ஆர்கெஸ்ட்ரா கொண்டு சின்ன பேக் அப் செய்திருப்பார் – அழகாக இருக்கும்.

2:00 இல்
தான் இந்தப் பாட்டின் இன்னொரு ஏஆர்ஆர் சிக்னேச்சர் மொமண்ட் வரும்

“தோளிரண்டக் கல்லாக்கு
முதுகெலும்ப
வில்லாக்கு
கால்கள் தான் உன் பல்லாக்கு
ஓ ராஆஆஆஆயா ( சஸ்டெய்ண் – 10)

இந்த இடத்தின் அழுத்தம் கருதி
மறுமுறை இந்த வரிகள் ஒலிக்கும்

தோளிரண்டக் கல்லாக்கு
முதுகெலும்ப
வில்லாக்கு
கால்கள் தான் உன் பல்லாக்கு
ஓ ராஆஆஆஆயா ( சஸ்டெய்ண் – 11)

2:18 முதல்
ஓ ராயாஆஆஆஆ ஹ்ம்மிங் தொடங்கும்
ஆனால் இம்முறை
பின்னணியில்

ரிதம் + ஆர்கஸ்ட்ரா பேக் அப்புடன் கூட

கானவ்யா ….
ஆஆஆஆ என்று மெலிதாக ஹ்ம்மிங் செய்திருப்பார்

2:38 தொடங்கி 2:51 வரை இருமுறை
தன்னானான
தன்னானான
தந்தா நானனனா..
என்று இருமுறை பாடுவார்..

இறுதியாக
ஏஆர் ரஹ்மான்
ஓ ராயாஆஆஆ
என்று இறுதி சரணத்தை முடிக்கையில்
பாடல் எப்படி முதல் பத்து நொடிகளில் இரண்டு ஸ்ட்ரிங்க்ஸ் ஒலியைக் கொண்டு தொடங்கியதோ ?
அதே போல இறுதி பத்து நொடிகளில் அதே ஒலிகளுடன் முடிவுறுகிறது.இதுவும் ஏஆர்ஆர் டச்.

அதிக களேபரம் இல்லாமல்
குரல்களின் டைனமிக்ஸ் என்று கூறப்படும் ஏற்ற இறக்கங்கள்

சிம்பிளான ஆனால் நல்ல அழகான அர்த்தமுள்ள ட்யூனுக்குள் உட்காரும் வரிகள்

கூடவே ரிதம் + ஸ்ட்ரிங்க்ஸ் சேர்த்துக் கொண்டு செய்யப்பட்ட மேஜிக்

இந்தப் பாடல் ஒருங்கே

வரலாறாகி விட்ட கடந்த காலத்தையும்

நிகழ்கால சோகத்தையும்

எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும்
ஒருங்கே நமக்குக் கடத்துகிறது .

கட்டாயம் கேட்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

 Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.