டிஜிட்டல் கைது மோசடி – பறிபோன பல கோடிகள்!
புகார்தாரா் திரு.ஸ்ரீநிவாசவர்மா என்பரின் கைபேசிக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து Whats app ல் மும்பை இணையவழி குற்றப்பரிவிலிருந்து பேசிகிறோம் என்றும் தங்கள் வங்கி கணக்கில் முறையற்ற சட்டவிரோதமான பணபரிவர்த்தணைகள் நடந்துள்ளது என்றும் உங்களுக்கு மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவா்களிடம் இருந்து ஒரு அழைப்பானை வந்துள்ளது. எனவே 0 எண்ணை அழுத்தவும் உங்களுக்கு தகவல் வரும் எனவும் புகார்தாரருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 0 எண்ணை அழுத்தியவுடன் மறுமுனையில் அறிமுகம் இல்லாத நபர் உங்களை Digital ARREST செய்துள்ளோம் இந்த வழக்கில் மேல் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்றால் புகார்தாரா் தன்னை கைது செய்வதை தவிர்க்க பணம் கட்டவேண்டும் என்றும் கூறியதால் கடந்த 24.08.2024 முதல் 28.08.2024 நான்கு நாட்களுக்கு பல தவணைகளாக மொத்தம் ஒருகோடியே பதினைந்து லட்சம் (1,15,00,000) ரூபாய் செலுத்தி உள்ளார். அதன் பின்பு மேற்படி தனது பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவரவே இது சம்மந்தாமாக 1930 -யை தொடா்பு கொண்டுபுகார் அளித்துள்ளார்.
மேற்படி இது சம்மந்தமாக இணைய வழிகுற்றப் புலனாய்வு பிரிவு தலைமையகத்தில் குற்ற எண் Cr.No.41/2024 U/s.316(2), 318(4) BNS & Sec. 66D of IT(Amendment) Act, 2008. வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் புகார்தாரரின் பணம் சட்ட விரோதமாக் சென்ற Vin Power Energy Solution Private Limited Company யின் SBI Account -க்கு பணம் சென்றுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.
மேற்படி அந்நிறுவனத்தின் வங்கிகணக்கை பயன்படுத்தி வரும் இயக்குநர்களான விஸ்வநாதன் (ஆ/வ.54), ஜெயராமன்(ஆ/வ.57), சுனில்குமார் (ஆ/வ.26) ஆகியோர்களை கைது செய்து அவர்கள் வங்கிகணக்கில் உள்ள பணம் 52 லட்சம் முடக்கப்பட்டது. மேற்படி எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய வேண்டி விசாரணயைில் உள்ளது.
பொதுமக்களுக்கான அறிவுரைகள்:-
- மின்னஞ்சல்கள் மற்றும் இணையதள இணைப்புக்களை கவனமாக கையாளுங்கள். தூண்டில் மின்னஞ்சல்கள், சைபா் தாக்குதல் நடத்துபவா்கள்
- உங்கள் கணிணியை அணுகுவதற்கான பொதுவான வழியாகும். சந்தேகத்திற்குரிய அறிமுகமில்லாத அனுப்புனா்கள் அனுப்பும் இணையதள இணைப்புகளை கிளிக்செய்ய வேண்டாம். ஏதாவது இணையதள இணைப்புக்களை லிங்க்குகளை கிளிக் செய்வதற்கு முன்பு அது முறைப்படியானதுதானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். தெரியாத நபா்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் இணைப்புகள் மற்றும் மின்னணு கோப்புக்களை கிளிக் செய்வதற்கு முன்பும் அல்லது ஏதேனும் தகவல்களை பதிவிறக்குவதற்கு முன்பும் மின்னஞசல்களின் சட்டப்பூர்வமான தன்மைகளை உறுதி செய்துகொள்ளவும்.
- மென்பொருள் கோப்புக்கள் மற்றும் மென்பொருள் செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் மென்பொருள் வழங்குநா்களிடமிருந்து பதிவிறக்கம் செய்யவும் மற்றும் போலியான பதிப்புகளை தவிர்கவும். ஏனெனில் அவை தீங்கு செய்பவையாக இருக்கலாம்.
- நம்முடைய இரகசிய தகவல்களை பகிர்ந்து ஏமாற வேண்டாம். தொலைபேசி அழைப்புக்கள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் வரும் தகவல் கோரிக்கைகளுக்கு பதில்அளிக்க வேண்டாம்.
- வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்தவும். ஓவ்வொரு கனத்திற்கும் தனிப்ட்ட மற்றும் சிக்கலான கடவுச்சொற்களை உருவாக்கி அவற்றை அவ்வப்போது மாற்றவும்.
- சமூக ஊடகங்கள் அல்லது பாதுகாப்பற்ற தளங்களில் முக்கியமான தகவலை பகிர்வதை தவிர்க்கவும். (உங்கள் முகவரி மற்றும் நிதி தொடா்பான விவரங்கள்).
- “சைபா் அரெஸ்ட்”என்பது சட்டத்திலேயே இல்லை. சைபா் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) என்று எவராவது கூறினால் அது நிச்சயமாக ஒரு மோசடி என்று அறியவும். அதுபற்றி உடனடியாக போலீசில் புகார் செய்யுங்கள்.
- நீங்கள் லாட்டரி சீட்டை வாங்கவில்லை என்றால் அதில் பரிசு பெறுவது சாத்தியமா? மிகவும்க வனமாக இருக்கவும்.
புகார் அளிக்க:
சைபா் குற்றத்தால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் நடவடிக்கை கோர் சைபா் கிரைம் டோல் ப்ரீ ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in, என்ற இணைதளத்தில் புகாரை பதிவு செய்யவும்.