ஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்த தினகரன் – நெகிழ்ந்த தூத்துக்குடி மக்கள்
ஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்த தினகரன் – நெகிழ்ந்த தூத்துக்குடி மக்கள்
எடப்பாடி அரசின் ஏவல்துறையால் சுடப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அங்கே இருந்த மக்கள் தினகரனிடம் ஆவேசமாக ” எடப்பாடி ஆட்சி எங்களுக்கு வேண்டாம், இந்த கொலைகார அரசு எங்ஙஙளுக்கு வேண்டாம் ” என்றும், ” எங்களுக்காக நீங்கள் தூத்துகுடியில் போராடினீர்கள், அதனால் உங்களை மட்டும் நாங்கள் ஏற்கிறோம் “, என்று கூறினர்.
இதை கேட்ட தினகரன் நெகிழ்ந்து போய், ” உங்களுக்காக நான் என்றும் போராடுவேன், இந்த ஆலை முடும் வரையிலும், உங்களுக்கான வாழ்வு மலரும் வரையிலும், நான் உங்களுடனே இருந்து போராடுவேன் “, என்று சொல்லி கண் கலங்கினார்.
மேலும் துப்பாக்கி சூட்டில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் என 10 நபர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என 62 நபர்களுக்கும் நிதியுதவி வழங்கினார்.
காயமடைந்தவர்களில் பிரின்ஸ்டன் என்ற இளைஞனுக்கு கால் எடுக்கப்பட்டிருந்தது.. அவரிடம் ஆறுதலாக பேசிய தினகரன், அவருக்கு வேலைவாய்பினை ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்து, ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
அங்கே இருந்த அனைத்து மக்களையும் சந்தித்த தினகரன், ” தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அது விரைவில் களைந்து எறியப்படும் “, என்ற வாக்கினை அளித்தார்.
மேலும் சொன்னது போல அம்மக்களின் துயர் நீக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆயுத்தமானார். நீதி விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளார்.
பல அரசியல் தலைவர்கள் வாக்குறுதியோடு மறைந்து போக, உடனடியாக வந்து ஆறுதல் சொல்லி, நிதியுதவி அளித்த தினகரனின் எண்ணத்தை கண்ட மக்கள் நெகிழ்ந்தனர்.
உள்ளப்படியே தினகரனுக்கு ஒரு சல்யூட் தான்பா…!