மன்னர் பரம்பரை வேட்பாளரைத் தோற்கடித்து … புதிய வரலாறு படைத்திட்ட தி.மு.கழகம்…!!!
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடந்த முதல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்… 1952ல் நடைபெற்றது. அப்போது இராமநாதபுரம் சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டவர்… ராமநாதபுரம் மன்னர். அப்போது அவரை எதிர்த்து எந்தக் கட்சி வேட்பாளரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை. அதனால் “அன்ன போஸ்ட்” ஆக ராமநாதபுரம் மன்னரே வென்று வந்தார்.
தொடர்ந்து 1952, 1957, 1962 என மூன்று முறையும், இராமநாதபுரம் மன்னரே, அவரை யாரும் எதிர்த்துப் போட்டியிடாத “அன்ன போஸ்ட்” ஆகவே வெற்றி பெற்று வந்தார்.
அந்த மூன்று முறை நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இராமநாதபுரம் மன்னர் வேட்பு மனுத் தாக்கல் செய்வதோடு சரி. வாக்காளர்கள் எனப்படும் பொது மக்கள் எவரையும் ஒரு சம்பிரதாயமாகக் கூட நேரில் சென்று சந்தித்ததில்லை.
எவருமே அவரை எதிர்த்துப் போட்டியிடவில்லை என்பது வேறு விசயம். மக்களாட்சி ஜனநாயகப் பொதுத் தேர்தலில் கூட, மக்களைச் சந்திக்காமலே மூன்று முறை வென்ற மன்னர் அவர்.
இநநிலையில் 1967 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் வருகிறது. அப்போது அண்ணா அவர்களிடம் கருணாநிதி நேரில் சென்று, இந்த முறையாவது (1967) நமது (திமுக) கட்சி சார்பாக ஒருவரை தேர்தலில் நிறுத்துவோம் என்கிறார்.
அப்போது அண்ணாவும் சற்று தயங்குகிறார். கருணாநிதி விடவில்லை. “நீயே பார்த்துக் கொள்” என்று அரை மனதுடன் ஒப்புபுதல் தருகிறார் அண்ணா. கருணாநிதி “இவர் தான் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்” என்று அண்ணாவிடம் சொல்கிறார்.
பெயரையும் அவர் என்ன செய்கிறார் எனக் கேட்டு அறிந்ததும் அதிர்ச்சி அடைகிறார் அண்ணா. இராமநாதபுரம் மன்னரை எதிர்த்துப் போட்டியிடுபவர்… திமுக வேட்பாளர் தங்கப்பன். அதாவது குதிரை வண்டிக்கார தங்கப்பன். இராமநாதபுரம் பஸ்ஸ்டான்டில் குதிரை வண்டி ஓட்டுபவர். இதனைக் கேள்விப்பட்ட இராமநாதபுரம் மன்னருக்கோ பேரதிர்ச்சி.
நம் அரண்மனையில் வயோதிக் குதிரைகளை வாங்கிச் சென்று, வாடகை வண்டியோட்டி வயிற்று ஜீவனம் பண்ணும் குதிரை வண்டிக்கார தங்கப்பனா…???
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வழக்கம் போல 1967 தேர்தலிலும் அரண்மனைக்கு உள்ளேயே அமைதியாக இருந்து விட்டார் இராமநாதபுரம் மன்னர். மன்னரை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தி விட்டு சும்மா இருக்கவில்லை கருணாநிதி.
திமுக வேட்பாளரான குதிரை வண்டிக்கார தங்கப்பனை, தன்னுடன் கூடவே அழைத்துக் கொண்டு சென்று, ஊர் ஊராக தெருத் தெருவாக அலைந்து பொது மக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்தார் கருணாநிதி.
அந்தத் தேர்தலில் இராமநாபுரம் மன்னரைத் தோற்கடித்து, திமுக வேட்பாளர் குதிரை வண்டிக்கார தங்கப்பன் வெற்றி பெற்றார். இது கடந்த கால வரலாறு.
ஸ்ரீரங்கம்
திருநாவுக்கரசு,
உழைக்கும்
மூத்த இதழியலாளர்.