மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் திருக்கார்த்திகை பட்டாபிஷேக விழா …
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு முருகபெருமானுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரகணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை விழா கடந்த 5-ம்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்தியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில், திருக்கார்த்திகையின் 8-ம் நாள் திருவிழாவையொட்டி கோவில் மண்டபத்தில் முருகபெருமானுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு உற்சவர் முருகபெருமான், தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளியதை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து வேதமந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட முருகபெருமானுக்கு பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 9 ம் நாள் திருவிழாவாக டிச13 காலை சிறிய சட்டத்தேரில் முருகபெருமான் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வரும் நிகழ்வும் மலை மீது தீபம் ஏற்றும் திருக்கார்திகை திருவிழா டிச 13 மாலை 6 மணிக்கும் நடைபெறுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கான விழா ஏற்பாடுக்ள அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது ஏற்றப்படும் மகாகார்த்திகை தீபத்தை காண ஆயிரகணக்கானோர் பக்தர்கள் கூடுவர் என்பதால் திருப்பரங்குன்றத்தில் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விழாவை முன்னிட்டு நகர பேருந்துகளும் கூடுதலாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.
— ஷாகுல், படங்கள் :ஆனந்தன்.