அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ரொம்பவும் இனிமையாக இருந்தது அந்த துணிப்பை!

திருச்சியில் அடகு நகையை விற்க

தி.மு.. ஓர் அரசியல் இயக்கம் என்றால், அதில் ஒவ்வொரு உண்மைத் தொண்டருமே தனி மனித இயக்கம்தான். மக்களின் கண்களில் படுகிற வகையில் தங்கள் வீட்டின் கதவுஜன்னலில், தெருவோர படிப்பகத்தில், சுவர்களில் எல்லாம் உதயசூரியன் சின்னம் தெரிவது போல செய்வார்கள்.

இப்போது காலத்திற்கேற்றது போல சமூக வலைத்தளங்களில் களமாடுகிறார்கள்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பிறந்திருக்கும் புத்தாண்டான 2026ஆம் ஆண்டு என்பது திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான ஆண்டு. கடந்த 5 ஆண்டுகால சாதனைகளை எல்லா வகையிலும் மக்களிடம் கொண்டு சென்று, மீண்டும் தி.மு. ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சரான கழகத் தலைவரும், இளந்தலைவரான துணை முதலமைச்சரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தொண்டர்களும் அவரவர் வழியில் அதனைச் செய்கிறார்கள்.

துணிப்பை
துணிப்பை

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

திருச்சியை சேர்ந்த அன்பு உடன்பிறப்பு ஜெரி, புத்தாண்டுக்காக கேக்இனிப்புபலகாரங்கள் அனுப்பி வைத்தார். அந்தப் பார்சலை பிரித்தபோது, அவர் அனுப்பியதிலேயே ரொம்பவும் இனிமையாக இருந்தது ஒரு துணிப்பை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நல்ல தரமான அந்தப் பையை, பால் பாக்கெட், காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக  அன்றாடம் பயன்படுத்த முடியும். அதன் ஒரு பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளுடன், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை அச்சிட்டிருக்கிறார்.

பொருட்களை வாங்கி வருபவரைக் கவனிக்கும் எவரும் நிச்சயமாக பையைக் கவனிப்பார்கள். அதில், அச்சிடப்பட்டிருக்கும் சாதனைகளை கவனிப்பார்கள். அவை குறித்து அவர் மனதளவிலோ, நட்பு வட்டத்திடமோ பேச்சு எழும். அதுதான் களத்திற்கானப் பரப்புரையின் தொடக்கம்.

கோவி.லெனின்
கோவி.லெனின்

உடன்பிறப்பு ஜெரியைப் போல ஆயிரமாயிரம் தொண்டர்களைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம். அவர்களில் பலர், மேடை ஏற மாட்டார்கள். மைக்கைப் பிடிக்க மாட்டார்கள். நாற்காலியை எதிர்பார்க்காமல் ஓரமாக ஒதுங்கி நிற்பார்கள். ஆனால், தேர்தலில் தன்னால் இயன்ற அளவுக்கு உதயசூரியனுக்கு வாக்குகளைக் கொண்டு வந்து சேர்க்கும் உத்திகளைத் திறமையாகக் கையாண்டு தன் வாக்குச்சாவடியில் உதயசூரியனுக்கான வாக்குகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கச் செய்வார்கள்.

பேசி வளர்ந்த இயக்கத்தின் தொண்டர்களில், பேசாமலும் பரப்புரை செய்யும் வல்லவர்களும் உண்டு. 75 ஆண்டு கால இயக்கத்தின் வலிமைகளில் இதுவும் ஒன்று.

—   கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளர்.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.