அமலாக்க பிடியில் திமுக அமைச்சர்கள் ; நோட்டீஸ்-விசாரணை-கைது !
தமிழக அரசியலை கலங்கடிக்க கூடிய முக்கிய செய்தி தற்போது கசிந்துள்ளது, இந்தச் செய்தி படிப்பவர்களை மட்டுமல்ல தமிழ்நாடு அரசையுமே சற்று அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.
இந்தச் செய்தி வெளிவந்த உடனேயே தமிழ்நாடு அரசு தன்னுடைய அடுத்த நகர்வை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. அப்படி என்ன ரகசியம் கசிந்து இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள்.
தமிழ்நாட்டிற்கு புதிதாக வந்துள்ள ஆளுநர் ,தமிழ்நாடு டிஜிபி–யை அழைத்து பேசியுள்ளார். அப்போது டிஜிபியிடம் சில மிகமுக்கிய விஷயங்களை குறிப்பிட்டாராம்.
தற்போதைய தமிழக அமைச்சர்கள் பலர் மீது முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சம்பந்தமாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதில் 4 அமைச்சர்களின் வழக்கு தற்போது முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறதாம். இதனால் அமலாக்கத்துறை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றிருக்கிறது. மேலும் நான்கு அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக கூறியிருக்கிறதாம் அமலாக்கத்துறை.
ஆனால் அந்த நான்கு அமைச்சர்களும் விசாரணையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்களாம். இதனால் அவர்கள் மீது விரைவில் அமலாக்கத்துறை நடவடிக்கை பாயும் என்றும் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறி இருக்கிறாராம்.
இது மட்டுமல்லாது ஒருவேளை கைது செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கிற்கு எவ்வித பாதிப்பும் வரக்கூடாது என்று கூறினாராம்.
இந்த விசாரணை வளையத்தில் தற்போது உப்பு உற்பத்தி நகரத்தைச் சேர்ந்த அமைச்சரும், பெண் அமைச்சர் ஒருவரும், கரண்ட் அமைச்சரும், மத்திய மண்டல அமைச்சர் ஒருவரும் என்று இவர்களின் பெயரே தற்போது முன்னணியில் உள்ளதாம்.
அதேசமயம் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கூட மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது, மேலும் மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிராக செயல் படுவதாலும், அதோடு மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தும் அளவிற்கு சென்று இருப்பதால் இதை குறைப்பதற்காகவே தற்போது இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது என்றும் பேசப்படுகிறது, இதை நடைமுறைப்படுத்தவே உளவுத் துறையில் பணியாற்றிய நபரை தற்போது தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.