அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கட்சித் தலைமையை கடுப்பாக்கிய திமுக எம்.எல்.ஏ.க்கள்! ஸ்டாலின் ஷாக் ட்ரீட்மெண்ட்!

திருச்சியில் அடகு நகையை விற்க

“நாம் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் நானே நிற்பதாக நினைத்து கட்சியினர் களப்பணியாற்ற வேண்டும். உள்கட்சிப்பூசல்கள் எங்கு நடந்தாலும் என் காதுக்கு உடனே வந்துவிடும். தேர்தல் நேரம் என்பதால் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என யாரும் நினைக்க வேண்டாம். மா.செ.வாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி உடனே நடவடிக்கை எடுப்பேன்” என  தேர்தல் தேதி அறிவித்த பிறகு நடந்த திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் கட்சியினருக்கு கடும் எச்சரிக்கைவிடுத்துப் பேசியிருந்தார் திமுகவின் தலைவரும் முதல்வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

கூட்டணிக் கட்சியினருக்கு தொகுதிகள் ஒதுக்கிய பின் திமுக போட்டியிடும் 164 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிவித்த பின் மார்ச்.30ஆம் தேதி தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார் மு.க.ஸ்டாலின். அத்துடன் திறந்த ஜீப்பில் பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

சில அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் வழங்கவில்லை ஸ்டாலின். பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம்க்கு ஒதுக்கப்பட்டதால் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை தலைமை. இதனால் மனோ தங்கராஜின் ஆதரவாளர்கள், தங்களது வருத்தத்தை தொகுதிக்குள்ளேயே வெளிப்படுத்தி அமைதியாகிவிட்டனர்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - MMM TRICHY -

ஆனால் தாம்பரம் திமுக எம்.எல்.ஏ.வும் கட்சியின் மாநகரச் செயலாளராகவும் இருக்கும் எஸ்.ஆர்.ராஜாவுக்கு சீட் கொடுக்காமல் டாக்டர் கிருத்திகா தேவி என்பவருக்கு சீட் கொடுத்துள்ளது தலைமை. இதனால் கொந்தளித்த ராஜாவின் ஆதரவாளர்கள், வேட்பாளர் பட்டியல் வெளியான அன்றே கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் வீட்டுக்கே சென்று கட்சித் தலைமைக்கு எதிராக கோஷம் போட்டனர். பாலுவின் பக்கத்தில் கண்ணீர்மல்க நின்றிருந்தார் ராஜா.

எஸ்.ஆர்.ராஜா
எஸ்.ஆர்.ராஜா

“இந்த சீன் போடுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். மூன்று தடவை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்காருல்ல. அது போதாதா? அடுத்த ஆளுகளுக்கு வாய்ப்பு கொடுக்கணும்லய்யா. பழைய ஆளுகளுக்கு கொடுத்தா புது ஆளுகளே இல்லையாங்குறீங்க. புது ஆளுகளுக்கு கொடுத்தா பழசை மறந்துட்டீகளாங்குறீங்க. கூட்டணிக் கட்சிகளின் பிரச்சனைய எவ்வளவு டேக்டிஸா சமாளிச்சுருக்காரு தலைவர். இந்த நேரத்துல உங்க மண்டையடி வேற. ஒழுங்கா கலைஞ்சு போங்க, அடுத்த முறை பார்த்துக்கலாம்” என ஏகத்துக்கும் டென்ஷனாகி எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்களை எச்சரித்து அனுப்பிவிட்டார் டி.ஆர்.பாலு.

ஆனாலும் அடங்காத ராஜாவின் ஆதரவாளர்கள், மறுநாள் அறிவாலயம் போய், ஸ்டாலின் முன்பாகவே கோஷம் போட்டுவிட்டனர். இதனால் செம கடுப்பாகிவிட்டாராம் ஸ்டாலின். “ச்சே…இது நல்லதுக்கில்லையே” என டி.ஆர்.பாலுவிடம் கொந்தளித்துள்ளார். இதன் விளைவு விரைவில் தாம்பரம் மாநகரச் செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜாவையும் அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்பையும் பறிக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம் மு.க.ஸ்டாலின்.

இதற்கடுத்து தலைமைக்கு கடுப்பைக் கிளப்பியிருப்பவர்கள் தியாகராய நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெ.கருணாநிதியும் அவரது ஆதரவாளர்களும். 2021 தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் சத்யாவிடம் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார் ஜெ.கருணாநிதி. எம்.எல்.ஏ.ஆனதுமே வட்டச் செயலாளர் பதவிக்கு 3 முதல் 7 ஸ்வீட் பாக்ஸ்கள் வரை வாங்கிக் கொண்டு பதவி கொடுத்தார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தொகுதியில் புதிய கட்டிடம் கட்ட ஆரம்பித்தாலே இவருக்கு வெயிட்டாக ஸ்வீட் பாக்ஸ் கொடுக்க  வேண்டும். தொகுதிக்குள் அடங்கிய திமுக கவுன்சிலர்கள் கருணாநிதியின்  ஏஜெண்டுகள். இதவிட முக்கியமான மேட்டர் என்னன்னா… ‘சாயங்காலம் ஆறு மணிக்கு மேல ஆட்டோ ஓடாதுங்கிற’ கதை தான் கருணாநிதியின் கதை.

ஜெ.கருணாநிதி
ஜெ.கருணாநிதி

இதையெல்லொம் கூட்டிக் கழித்துப் பார்த்த திமுக தலைவர், இந்த முறை ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனை தியாகராய நகர் தொகுதி வேட்பாளராக அறிவித்துவிட்டார். [கருணாநிதியின் உடன்பிறந்த அண்ணன் தான் ஜெ.அன்பழகன்] இதனால் டென்ஷனான ஜெ.கருணாநிதி கட்சியின் தி.நகர் கிழக்கு பகுதிச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து தலைமையை கடுப்பாக்கிவிட்டார். கருணாநிதியின் ஆதரவாளரான  தி.நகர் மேற்குப் பகுதிச் செயலாளரான ஏழுமலையும் கட்சிப் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளாராம். ஆனால் தொகுதிக்குள் வரும் 14 வட்டச் செயலாளர்களில் 4 வ.செ.க்கள் மட்டும் கருணாநிதியின் சொல்பேச்சுக் கேட்டு, தலைமை அறிவித்துள்ள ராஜா அன்பழகனுக்கு வேலை செய்ய மறுக்கிறார்களாம்.

ராஜா அன்பழகன்
ராஜா அன்பழகன்

இதையெல்லாம் அறிந்து உஷாரான ராஜா அன்பழகன், நேற்று [ மார்ச்.30] நடந்த சென்னை தென்மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு 14 வ.செ.க்களையும் அழைத்துப் பேசியுள்ளார். தலைவர் ஸ்டாலின் ஆட்சி இரண்டாவது முறையும் தொடர வேண்டும். களத்தில் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்க. விருப்பமில்லாதவர்கள் இப்போதே சொல்லிவிட்டால் நல்லது” என வேண்டுகோள் வைத்துப் பேசியுள்ளார் ராஜா அன்பழகன்.

மா.செ.வும் அமைச்சருமான மா.சு.வையும் சந்தித்து கலவர நிலவரத்தைச் சொல்லியுள்ளார்.

கட்சியின் சென்னை மண்டல பொறுப்பாளர் ஆ.ராசாவும் சமாதான பஞ்சாயத்து பேசியுள்ளார்.

தி.நகர் கிழக்கு பகுதிச் செயலாளராக கோ.சு.மணியை உடனடியாக நியமித்து ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளார் தலைவர் ஸ்டாலின்.

—   கரிகாலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.