அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘பள்ளிச்சட்டம்பி’ பிரஸ்மீட் நியூஸ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வோல்டு வைட் பிலிம்ஸ் & சி கியூப் பிரதர்ஸ் பேனர்களில் நோஃபல் பிரிஜீஷ், சானுக்யா, சைதன்யா, சரண் ஆகியோரின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி டைரக்‌ஷனில் மலையாள ஹீரோ டொவினோ தாமஸ், சென்சேஷனல் ஹீரோயின் கயாது லோஹர் மற்றும் மலையாள நடிகர்கள் நடித்துள்ள படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படம் தமிழ், தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏப்ரல் 10-ஆம் தேதி  ரிலீசாகிறது. தமிழ்நாட்டில் சக்ரா பிக்சர்ஸ் வெற்றி வெளியிடுகிறார்.

படத்தின் தமிழ் பதிப்பின் ப்ரமோஷனுக்காக டொவினோ தாமஸ், கயாது லோஹர்,  தயாரிப்பாளர்கள் சைதன்யா, சரண், இணைத் தயாரிப்பாளர்  மேகா ஷ்யாம், ஆகியோர் சென்னை வந்திருந்தனர். பிரசாத் லேப் தியேட்டரில் படத்தின் ஒரு பாடலும் டிரெய்லரும் திரையிட்ட பின்னர் ஐந்து பேரும் பேசினார்கள்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

 டொவினோ தாமஸ்,
டொவினோ தாமஸ்,

மேகா ஷ்யாம், “சினிமாவில் பதினாலு வருசங்கள் இருந்தாலும் இப்போது தான் இணைத் தயாரிப்பாளராக மேடையேறியுள்ளேன். இந்தப் படம் எமோஷனல், ஆக்‌ஷன் எண்டெர்டெய்னர். டொவினோவும் மற்றவர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்”.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

வெற்றி, “இது எங்களுக்கு முதல் படம். சூப்பரான கண்டெண்ட் உள்ள படம். அனைவரும் ஆதரவு தர வேண்டும்”.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சரண், “சகோதரர்கள் நாங்கள் மூன்று பேர் இணைந்து தயாரித்துள்ள முதல் படம் இது. 1950-களில் கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது இப்படம்”.

கயாது லோஹர்
கயாது லோஹர்

கயாது லோஹர், “மலையாளத்தில் எனக்கு மூன்றாவது படம் இது. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ள எனது கேரக்டர் உங்கள் எல்லோரும் மிகவும் பிடிக்கும். இந்த வாய்ப்பைக் கொடுத்த டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் ஹீரோ டொவினோவுக்கு நன்றி”.

டொவினோ தாமஸ், “2018—லிருந்து இந்தக் கதையை விவாதித்து, 2025 பிப்ரவரியில் ஷூட்டிங்கை ஆரம்பித்து இப்போது ரிலீஸ் வரை வந்திருக்கோம். 1957-58-ல் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு பின்னணியில் கதை நகரும். இதற்காக அனைவருக்கும் கடுமையான உடல் உழைப்பு தேவைப்பட்டது. ரசிகர்களுடன் தியேட்டரில் ஏப்ரல் 10-ஆம் தேதி பார்த்தால் தான் எனக்கு முழு திருப்தி கிடைக்கும். நிச்சயம் அவர்களின் வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன்”.

—   ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.