அமைச்சரவை மாற்றத்திற்கு தயார் ஆகும் தி.மு.க. – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி மூவ்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமைச்சரவை மாற்றத்திற்கு தயார் ஆகும் தி.மு.க. – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி மூவ் – வரும் ஜூன் 3ஆம் நாள் திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. அடுத்த நாள் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கிவிடும். பகல் 12.00 மணியளவில் இந்திய ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப்போவது பாஜகவா? காங்கிரஸ் ஒருங்கிணைப்பில் உள்ள இந்தியா கூட்டணியா? என்பதற்காக முன்னணி நிலவரங்கள் தெரியத் தொடங்கிவிடும். மாலை 4 மணிக்கு எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெளிவாகிவிடும்.

முக ஸ்டாலின் அதிரடி உத்தரவு

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

முதல்வர். மு.க.ஸ்டாலின்
முதல்வர். மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றிச் சாதனை படைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறிவருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தைத் தேர்தலுக்கு முன் கூட்டினார். அதில் பேசும்போது,“திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி 40 தொகுதிகளிலும் இருக்கவேண்டும். வாக்கு விழுக்காடு கூடியிருக்கவேண்டும். அப்படியே வாக்கு வித்தியாசமும் அதிகம் இருக்கவேண்டும். வெற்றி என்பது மட்டும் நம் இலக்கு அல்ல; எதிரிகளைக் களத்தில் நம் முன்னணித் தலைவர்கள் பிரச்சாரத்தால் பந்தாட வேண்டும். வாக்கு விழுக்காடு குறைந்தாலும், வாக்கு வித்தியாசம் குறைந்தாலும், அதற்குப் பொறுப்பான மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். பொறுப்பான அமைச்சர்களுக்கும் அமைச்சரவையில் இடம் இருக்காது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்” என்று அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அமைச்சர் காந்தியின் பதவி பறிபோகலாம்

அமைச்சர் காந்தி
அமைச்சர் காந்தி

ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் கூட்டம் நடைபெறவுள்ளது என்று பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. தேர்தல் முடிந்தவுடன், சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் அமைச்சர் காந்தி, அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட ஜெகத்ரக்ஷ்கனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் அமைச்சர் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று திமுக தலைமைக்கு மாவட்ட நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர். வேட்பாளர் ஜெகத்ரக்ஷ்கனும் முதல்வரிடம் நேரிலும் புகார் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் காந்தி அமைச்சர் பொறுப்பிலிருந்தும் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்பில் மகேஸ் வேறு துறைக்கு மாற்றப்படலாம்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திருச்சி மக்களவை தொகுதியில் உள்ள புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக அதிக வாக்கு வாங்கியுள்ளதாக உளவுத்துறை செய்தி முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக கூட்டணி வேட்பாளர் துரைவைகோ சுமார் 50 ஆயிரத்திலிருந்து 1 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் சுமார் 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளரைத் தோற்கடித்தார். திமுக கூட்டணி வெற்றிபெற்றாலும் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தால், இத் தொகுதிக்கான பொறுப்பு அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய நலவாழ்வுத்துறை அமைச்சராக மருத்துவர் எழிலன்

மருத்துவர் எழிலன்
மருத்துவர் எழிலன்

சென்னையில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பரந்தாமனுக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் மோதல் முடிவுக்கு வராமல் மோதல் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் அமைச்சர் சேகர்பாபு வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்றும், மத்தியச் சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கும் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியத்துக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. இவருக்குமிடையே இருக்கும் மோதல் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணி பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்படலாம் என்ற செய்தியும் திமுக வட்டாரத்தில் உலா வருகின்றது. புதிய நலவாழ்வுத்துறை அமைச்சராக இளைஞராக உள்ள மருத்துவர் எழிலன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக மாற்றப்படலாம் என்ற செய்தியும் உலா வருகின்றன.

திருவாரூர் பூண்டி கலைவாணன் அமைச்சராகிறார்

பூண்டி கலைவாணன்
பூண்டி கலைவாணன்

தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் என ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாத நிலையைப் போக்கத் திருவாரூர் மாவட்டச் செயலாளர் கலைஞர் வென்ற திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. திருப்பூர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அம் மாவட்டச் செயலாளர், அமைச்சர் வெள்ளகோயில் சாமிநாதன் மற்றும் கயல்விழியை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தற்போதைய திருப்பூர் திமுக மாவட்டச் செயலாளர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் திமுக தொடங்குகின்றது

தேர்தல் முடிவுகள் சாதகமாக இருந்தாலும், வாக்கு விழுக்காடு, வாக்கு வித்தியாசம் குறைந்தாலும் தொடர்புடைய மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள். அமைச்சர்களும் நீக்கம் செய்யப்படுவார்கள் அல்லது வேறு துறைக்கு மாற்றப்படுவார்கள் என்ற அச்சத்தின் பிடியில் திமுக முன்னணித் தலைவர்கள் உள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளைத் திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கிவிடுவார் என்றும் கூறப்படுகின்றது. திமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்பது தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தெரிந்துவிடும்.

–ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.