சமூக ஊடகம் என்ற போர்வையில் – கஞ்சா போதையை‌ விட காட்டமான சவுக்கு சங்கர் போதை !

0

கஞ்சா போதையை‌ விஞ்சிய சவுக்கு சங்கர் என்ற போதை‌ ! யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட விவகாரம் சோஷியல் மீடியாவிலும், அரசியல் அரங்கிலும்  பேசு பொருளாக மாறியிருக்கிறது.

அப்பட்டமான அவதூறு பேச்சுக்காக குறிப்பாக பெண் போலீசாரை இழிவாக பேசியது உள்ளிட்ட காரணங்களுக்காக கோவை மாநகர போலீசாரால் சவுக்கு சங்கர் கைது செய்யபட்டிருப்பதையும்; குறிப்பாக, கைது செய்து அழைத்து சென்ற வழியில் எதிர்பாராத விதமாக போலீசு வாகனம் விபத்துக்குள்ளானதையும்கூட, விமர்சித்து ”திராவிட மாடல் அரசின் சதி” என்பதாக கூப்பாடு போடுகிறார்கள், அவரது ரசிகர்கள்.

அதேநேரத்தில் தேனியில் தனியார் விடுதியில் வைத்து சவுக்கு சங்கரை இன்று  04.05.2024 கைது செய்த கோவை காவல்துறை சவுக்கு சங்கர் உடன் இருந்த இருவரை விசாரித்த போது கஞ்சா வைத்திருந்தது அம்பலமாகியிருக்கிறது.  சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

”முடிசூட்டப்பட்ட மன்னர்களா? இவர்களைப்பற்றி பேசவேக்கூடாதா?” என்று கருத்துரிமை குறித்து கவலை கொண்டு குரல் எழுப்புகிறார் அதிமுகவின் ஜெயக்குமார்.

- Advertisement -

கஞ்சா போதையை‌ விட காட்டமான சவுக்கு சங்கர் போதை !
கஞ்சா போதையை‌ விட காட்டமான சவுக்கு சங்கர் போதை !

சட்டக்கல்லூரி மாணவரும் சவுக்கு மீடியாவை சேர்ந்தவருமான கார்த்திக் கைது செய்யப்பட்டபோதே, ”கார்த்திக்கை கடத்திச்சென்றுவிட்டார்கள்; சட்டவிரோத கைது; அச்சுறுத்தும் நடவடிக்கை; மேலிடம் சொல்லி செய்துவிட்டார்கள்” என்றெல்லாம் பொங்கி எழுந்தார் சவுக்கு சங்கர். அறந்தாங்கியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கொடுத்த பண மோசடி புகாரில் புதுக்கோட்டை போலீசாரால் கார்த்திக் கைது செய்யப்பட்டிருக்கிறார், என்ற உண்மை வெளியானபோது, ”இதை சவுக்கு சி.இ.ஓ.வான என்னிடம் சொல்லிவிட்டு செய்திருக்கலாமே?” என்றார்.

இதனைத்தொடர்ந்து, சவுக்கு சங்கரின் தீவிர ஆதரவாளர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வேல்முருகன் கைது செய்யப்பட்டபோதும், ”சோதனை என்ற பெயரில் வேல்முருகன் வீட்டை போலீசார் சூறையாடுகிறார்கள்” என்றெல்லாம் சவுண்டு விட்டார், சவுக்கு சங்கர்.

“கூடிய விரைவில் என்னையும் கைது செய்யப்போகிறார்கள். 20-க்கும் மேற்பட்ட புகார்களை வாங்கி கையில் வைத்திருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் என்னை கைது செய்துவிடுவார்கள். சமரசம் பேச ஒரு போலீசு அதிகாரி என்னை தொடர்புகொண்டார். செத்தாலும் சாவேனே தவிர சமரசம் செய்துகொள்ள மாட்டேன். சவுக்கை முடக்கப் பார்க்கிறார்கள். அது முடியவே, முடியாது.” என்றெல்லாம் அடுத்தடுத்து சினிமாப்பட காட்சிகளை விஞ்சும் வகையில், நவரசங்கள் சொட்ட பேட்டியளித்திருந்தார்.

சவுக்கு சங்கர் கைது படங்கள்
சவுக்கு சங்கர் கைது படங்கள்

அவரது ரசிக குஞ்சுகள் விசிலடித்து ரசித்து கொண்டிருக்க, உண்மை விவரமறிந்தவர்களோ, ”அட ராமா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலியே” என்ற கவுண்டமணியின் வசனத்தை அசைபோட்டபடியே கடந்து சென்றார்கள்.
பொம்மை முதல்வர் என்று முதல்வரை விமர்சிப்பதில் தொடங்கி, ஏ.டி.ஜி.பி. அந்தஸ்திலான போலீசு அதிகாரி ஒருவரை தனிப்பட்ட முறையில் அவன் இவன் என்று பேசியதாகட்டும்; குறிப்பாக பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசியதாகட்டும் இவையெல்லாம் சவுக்கு சங்கர் யார் என்பதை? அவரது தரம் என்ன என்பதை எடுத்துரைப்பதற்கான எடுப்பான உதாரணங்களாக அமைந்திருக்கின்றன.

சவுக்கு சங்கர் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, பல்வேறு யூட்யூப் சேனல்களில் கலாச்சேத்ர பாணியில் பல சங்கதிகளோடு ஒரு மணி நேரத்திற்கும் குறைவில்லாமல் வழங்கியிருந்த பேட்டிகளில் ஏட்டைய்யா தொடங்கி டி.ஜ.ஐ. வரையிலான போலீசு அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டே பச்சையாக அவன் இவன் என்றும் ஒரு ஏஜிடிபியை குறிப்பிட்டு பொம்பள பொறுக்கி என்றெல்லாம் சகட்டு மேனிக்கு பேசியிருக்கிறார். ஊடக அறம் கருதி, சவுக்கு சங்கர் உச்சரித்த கொச்சையான வார்த்தைகள் சிலவற்றையும், போலீசு அதிகாரிகளின் பெயர்களையும் தவிர்த்திருக்கிறோம்.

சவுக்கு சங்கர் - மெய் மறந்த நிலையில்
சவுக்கு சங்கர் – மெய் மறந்த நிலையில்

சவுக்கு சங்கரின் தரங்கெட்ட பேச்சுக்களில் சிலவற்றை மட்டும் வாசகர்கள்.. பார்வைக்கு.. 

”சேப்பாக்கம் தொகுதியில் சின்னவருக்கு போட்டியாக நான் களமிறங்கிவிடக்கூடாது என்பதுதான் நோக்கம். உதயநிதி என்னைக் கண்டு அஞ்சுகிறார். வேறு என்ன காரணம்? குறைஞ்சது பத்து மணிக்கு மேல திருட்டு சரக்கு ஓட்றேனா? அல்லது திமுக கவுன்சிலர்களின் முழுநேரத் தொழிலான குட்கா விற்பனை செய்கிறேனா? இல்ல சின்னவர் மாதிரி ஊரான் காசை அடிச்சுப்போட்டு சினிமா எடுக்கிறேனா? இல்லை மாப்பிள்ளை மாதிரி அங்க இங்கனு மணல் கொள்ளையடிச்சி, ஒரு நிறுவனத்தில் போட்டு ஜீ ஸ்கொயர்னு கம்பெனி பெயரில் தமிழ்நாடு பூரா கபளீகரம் பன்றேனா?” என்று கொந்தளித்தவர், “முருகானந்தம், செந்தில்வேலன் (உளவுப்பிரிவு ஐ.ஜி), அருண் (ஏடிஜிபி) இந்த மூனுபேரும்தான் சவுக்கு மீடியா மீது நடக்கும் அத்தனை தாக்குதல்களுக்கும் காரணம்.” என்கிறார்.

”சவுக்கு ஆபிசில் டேட்டா திருடிவிட்டார்கள் என்று பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்தோம். * யோக்கியன் மாதிரி பேசுறாரு. விசாரிக்க வேண்டியதுதானே? யூனிபார்ம்ல போட்டிருக்கவன்லாம் பெரிசா வீரன்னு நினைச்சிறாதீங்க. கடைந்தெடுத்த கோழைங்க. **கிட்ட என்னய்யா, பாண்டிபஜார்ல கம்ப்ளையிண்ட் கொடுத்தேன் விசாரிக்கிறீங்களா? இல்லையானு கேட்டா, ஐ.ஜி. ** விசாரிக்க்கூடாதுனு சொல்லிட்டாருன்னு சொல்றாரு. * டி.ஜி.பி., * ஐ.ஜி. இந்த ஈக்வேசன் எப்படி இருக்கிறதுனு நீங்களெல்லாம் தெரிஞ்சிக்கனும். சொல்லுங்க சார் ***கிட்ட, இவனெல்லாம் மனுஷனானு கேட்டேன்னு அப்படின்னேன். இல்லைன்னா நம்பர் குடுங்க, நீயெல்லாம் மனுஷனானு வாட்சப் அனுப்புறேன்னு சொன்னேன்.

பெண்களின் செருப்படி ஆவேசம்
பெண்களின் செருப்படி ஆவேசம்
4 bismi svs

”**க்கே பயம். இவங்களை மீறி எதுவும் செய்ய மாட்டார். இங்க இருக்கிற ஒரு அதிகாரியை மாத்தனும். பைல் எழுதி வச்சார்னா ** சொல்லிடுவான் **கிட்ட. ** தாண்டிதானே ஃபைல் சி.எம்.கிட்ட போகனும். சி.எம்.க்கு சுயமா யோசிச்சி முடிவெடுக்கிற, திறன் இருக்கா? இப்போ, தமிழ்நாட்ட உண்மையிலேயே ஆட்சி செய்றது யாரு? இதற்கு எதிராகத்தான் அரசியலில் நான் களமிறங்குகிறேன்.”

”உங்களுக்குத்தான் போலீசு அதிகாரிங்க யூனிபார்ம்லா போட்டுகிட்டு போறத பார்த்து இவ்ளோ பெரிய ஆபிசர்னு நினைக்கிறீங்க. பொறுக்கிங்க அவனுங்க. எந்தவிதமான இழிவான செயலையும் இவர்கள் செய்ய தயங்க மாட்டார்கள்.
”உண்மையிலேயே ஒரு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுனதாகவே இருக்கட்டும். சி.இ.ஓ. என்கிட்ட சொல்லியிருந்தா அனுப்பி இருப்பேனே. ஏண்டா, திருட்டுத்தனம் பன்றீங்க? பெத்து கடத்துறவனோட போட்டோ எடுத்துக்கிறீங்க.

சமூக ஊடகம் என்கிற போர்வையில்.....சவுக்கு சங்கர் கூட்டாளி
சமூக ஊடகம் என்கிற போர்வையில்…..சவுக்கு சங்கர் கூட்டாளி

* அந்தாளுக்கு தெரியும் இது பொய்வழக்குனு. * போன்ற பொறுக்கிய ஆடவிட்டுட்டு வேடிக்கை பார்க்கிற இவர்களை என்ன சொல்றது.” ”* * அங்கதானே எஸ்.பி. வசதில்ல. அதனால பன்றாய்ங்க. அவன் ஒரு எஸ்.பி. * மேல டிஐஜி *. இந்த வேலையெல்லாம் செய்றதுக்காக * லீவ்ல போயிட்டான். ** அவர்தான் ரேன்ஜ் டி.ஐ.ஜி. * அவரும் அமைதியா இருக்கார்.

பக்கத்து ரூம்ல இருக்கிற **தான் இதெல்லாம் பன்றான்னு, *க்குத் தெரியாதா? ** எதுவுமே பன்ன முடியாதுனு ***க்குத் தெரியும்.

”இவனே, ஒன்னாம் நம்பர் பொம்பள பொறுக்கி. எங்க போனாலும் சப்ஆர்னிடேட்டா பார்த்து கை வைக்கிறான். இவரு ஒரு **யாக இருப்பாரு. சப் இன்ஸ்பெக்டர் மேல காதல் வருதுன்னா. உன் அழக பார்த்தா காதல் வருது. போற இடத்தில எல்லாம், உமன் கான்ஸ்டபிள், உமன் சப் இன்ஸ்பெக்டரு, உமன் டி.எஸ்.பி.யா லவ் பன்றாங்க. உன் வீட்ல வேல பார்த்த டிரான்ஜென்டர் ஏன் உன் பேர நெஞ்சில பச்ச குத்துது. நீ அவ்ளோ பெரிய போலீசு அதிகாரியா? இவனே ஒரு பொறுக்கி. இந்த பொறுக்கியத்தான் **யாக உட்கார வச்சி அழகு பார்க்குது.”

சவுக்கு சங்கரின் உச்சம்
சவுக்கு சங்கரின் உச்சம்

* என்ன தப்பு பன்னிட்டான்னா? நெற்றிக்கண் மணி மாதிரியே என்னையும் நினைச்சிட்டான். இதாண்டா என் வேலை. * சட்டைய கழட்டுறதுதாண்டா என் வேலை. நீ பொம்பள பொறுக்கினு நான்தானடா எழுதுனேன். உன் வீரத்தை என்கிட்டலடா காட்டனும்.

”சென்னையில் இருந்தா மட்டும் கிழிச்சி நட்ருவாரு தளபதி? யோவ் ஆட்சியே வெக்கேஷன்யா அவருக்கு. தனிப்பட்ட முறையில் என்ன பேசுறேன்? உதயநிதி எத்தனை மணிக்கு சரக்கு போடுறாருனு பேசியிருக்கேனா? என்ன சரக்கு போடுறாருனு பேசியிருக்கேனா? உதயநிதியை டார்கெட் பன்னுவேன். அது என் வேலை. 75 வருஷமா இருக்கிற கட்சி என் குடும்பத்துக்கு சொந்தம்னு சொல்றான்னா, அத டார்கெட் பன்னக்கூடாதா?”

உச்சகட்டத்தில் சவுக்கு சங்கர்...
உச்சகட்டத்தில் சவுக்கு சங்கர்…

”2023 இல் முதல்வர் ஸ்டாலினை குறிஞ்சி இல்லத்தில் பார்த்தேன். சின்னவருக்கு ஏதாவது கூடுதல் பொறுப்பு கொடுங்கனு சொன்னேன். போலீசை இவர்ட்ட கொடுத்துடுங்கனு சொன்னேன். நேரடியா அவர்கிட்டயே போயிட்டு நீங்க பொம்மைனு எப்படி சொல்ல முடியும்? அசிங்கமா இருக்கும்ல. பாவம் வயசான மனுஷன்.”

உதயநிதிக்கோ, ஸ்டாலினுக்கோ துளியோண்டு அறிவிருந்தா, இதையெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். என்ன காரணம் என்றால், நாளை 26 இல் **ரோ, *ணோ, *லோ, *ரோ மக்களிடம் சென்று வாக்குக் கேட்க போவதில்லை. ** என்ன பன்னுவாருன்னு சொல்லட்டா? ஆட்சி மாறுன உடனே எஸ்.பி. வேலுமணி வீட்ல கார்டுகிட்ட சொல்லி ஐந்து நிமிசம் அனுமதி வாங்கி கொடுங்கனு கூசாமல் கேட்பான் அவன். ”

இவையெல்லாம் சவுக்கு சங்கரின் ”கருத்துரிமை” என்று கடந்து சென்றுவிட முடியுமா? சவுக்கு சங்கர் என்பவர் யார்? அவரது தரம் என்ன என்பதையெல்லாம் தமிழக அரசியல் அறிந்தவர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காசுக்கு மாறடிக்கும் மட்டரகமான புரோக்கர் பேர்வழி என்பதையெல்லாம் மிக சமீபத்தில் லென்ஸ் தமிழ்நாடு யூடியூப் வழியே யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் அம்பலப்படுத்தியது உள்ளிட்டு போதுமான அளவுக்கு பலரும் பலவிதமாக கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

சவுக்கு சங்கர் மீது செருப்பு வீச்சு
சவுக்கு சங்கர் மீது செருப்பு வீச்சு

தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி எடப்பாடியெல்லாம் கிடையாது. நான் தான் உண்மையான எதிர்க்கட்சி.” என்று பகிரங்கமாக சவுக்கு சங்கர் சொல்லியிருப்பதிலிருந்தும், தனியே அரசியல் கட்சித் தொடங்கப்போகிறேன் என்று சமீபத்தில் அறிவித்திருப்பதிலிருந்தும் அரசியல் புரோக்கராகவும் தரம் உயர்ந்திருக்கிறார் சவுக்கு சங்கர்.
”தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்ற பழமொழிக்கேற்ப, சமூக ஊடகங்களில் நாலு வார்த்தை டைப் செய்யத் தெரிந்தவனெல்லாம் ஊடகவியலாளன் என்றும்; யூடியூபில் கதாகாலட்சேபம் செய்யத் தெரிந்தவனெல்லாம் பத்திரிகையாளன் என்றும் சமூகத்தையே தாங்கி நிற்கும் நான்காம் தூண்கள் நாங்கள் தான் என்றும் பெருமை பீற்றிக்கொள்வதை அங்கீகரிக்க முடியுமா?

கடந்தமுறை நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்ததோடு, தீர்ப்பை எழுதிய நீதிபதியின் அந்தரங்கத்தைப் பற்றியும் பெண்களை பற்றியும் இழிவாக பேசியதை சூமோட்டோ வழக்காக எடுத்துக்கொண்டு சவுக்கு சங்கரை சிறைபடுத்தினார்கள்.
இந்த முறை, தற்போது உயர்பதவியில் இருக்கும் உயர் அதிகாரிகள் பலரையும் பட்டவர்த்தனமாக பெயரை சொல்லி, அவன் – இவன் என்றெல்லாம் ஏக வசனத்தில் சகட்டுமேனிக்கு பேசியிருப்பதற்கு எத்தனை சூமோட்டோ வழக்குகள் பதிவாகியிருக்க வேண்டும்? சவுக்கு சங்கரின் எல்லை மீறிய செயல்பாடுகளை தனிப்பட்ட முறையில் எவர் ஒருவரும் எதிர்த்து எதுவும் செய்துவிட முடியாது. இவ்விவகாரத்தை நீதிமன்றமே கண்டுகொள்ளாமல் ஒதுங்கி போவதென்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என்றே கருத வேண்டியிருக்கிறது.

சவுக்கு சங்கர் மீது செருப்பு வீசும் பெண்கள்
சவுக்கு சங்கர் மீது செருப்பு வீசும் பெண்கள்

சமூக ஊடகம் என்ற போர்வையில் உலவும் சவுக்கு சங்கர் போன்ற பேர்வழிகளின் உடல்மொழியே அருவெறுக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது. ”ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவிதான். இந்த போலீசும் அதிகார வர்க்கமும்” என்ற சிகப்பு வசனத்தை மட்டும்தான் சவுக்கு சங்கர் பேசவில்லை. அதைத்தவிர மற்றதையெல்லாம் பேசிவிட்டார். ஒருவேளை அதையும் அவர் பேசுவாரேயெனில், சீமானையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு ”தமிழகத்தின் சேகுவேரா”வாகிவிடுவார்.

சிகரெட் சவுக்கு சங்கர்
சிகரெட் சவுக்கு சங்கர்

அடுத்தவன் மூக்கின் மீது விரல் படாமல் சுட்டும்வரைதான் உமக்கான கருத்துச் சுதந்திரம் என்பது சவுக்கு சங்கருக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அவ்வளவும் அப்பட்டமான திமிரும், ஆணவமும் அன்றி வேறென்ன? கஞ்சா போதையைக் காட்டிலும் அபாயகரமான ஒருவிதமான போதையில் ஆழ்ந்துக்கிடக்கிறார் சவுக்கு சங்கர் என்றே எண்ணத் தோன்றுகிறது. சவுக்கு யூட்யூப் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு கைத்தட்டி ரசிக்கும் ஒரு கூட்டமும் இருக்கும் வரையில், இந்தப் போதையிலிருந்து கண்டிப்பாக அவர் வெளிவர போவதுமில்லை. அவரிடமிருந்து இவர்களும் விடுபடபோவதுமில்லை!

– ஆதிரன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.