சினிமா உலகின் ‘கிங்’ யார்? ரகசியம் உடைத்த சந்தானம் ! 

0

சினிமா உலகின் ‘கிங்’ யார்? ரகசியம் உடைத்த சந்தானம் !  கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரம்மாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் மே-04-ஆம் தேதி நடைபெற்றது.

நான் தான் கிங்கு
நான் தான் கிங்கு

இந்நிகழ்வினில்…. எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் பேச்சு
” கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் மற்றும் சுஷ்மிதா அன்புசெழியன் இருவருக்கும் என் நன்றிகள். அடுத்ததாக இப்படம் முழுமை பெற மிகமுக்கிய காரணமான, எனக்கு வழிகாட்டியாக இருந்த சந்தானம் சாருக்கு நன்றி.

நடிகர் கூல் சுரேஷ் பேச்சு “இந்தப் படத்தில் நடித்ததற்கு எனக்கு நல்ல சம்பளம் தந்தார்கள். அன்புச் செழியன் மிகச்சிறந்த தயாரிப்பாளர்.இந்தப்படத்திற்கும் சந்தானம் தான் வாய்ப்பு வாங்கித் தந்தார். அவருக்கு என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன்”.

- Advertisement -

இயக்குநர் ஆனந்த் நாராயண் பேச்சு “தயாரிப்பாளர் அன்பு சார் கதை கேட்கிறார் என்றதும் அவரை நெருங்க முயற்சித்தேன். செந்தில் சார் மூலம் தான் அவரை சந்தித்தேன். ஒரு படம் செய்வதாக கதை சொன்னார்கள், உடனே ஒப்புக்கொண்டேன். எனக்காக முழு டீமையே கொடுத்தார்கள். படம் டாக்கி போர்ஷன் முடித்தவுடன் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்”.

தம்பி ராமையா பேச்சு “இப்படம் காம வாடை இல்லாத காமெடிப்படம். நல்ல கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவர் மனது தான். அவர் நிஜ ஹீரோ. அவருடன் பயணிப்பது மிகுந்த சந்தோஷம். இப்படத்தில் முழு நீள காமெடி பாத்திரம் செய்துள்ளேன்”.

ஹீரோயின் பிரியாலயா பேச்சு
“இந்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். என் முதல் பட மேடை. கடவுளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. என் தயாரிப்பாளர் அன்பு சார், சுஷ்மிதா மேடம் இருவருக்கும் நன்றி. எல்லோருக்கும் பிடித்த சந்தானம் சார், அவருடன் பழகிய யாருக்கும் அவரை பிடிக்காமல் போகாது. அவ்வளவு எளிமையானவர். முதலில் செட்டில் என்னுடன் இங்கிலீஷில் பேசினார். அவருக்கு நான் தமிழ்ப் பெண் என்பது தெரியாது. நான் சொன்ன பிறகு ஜாலியாக பேசினார் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

4 bismi svs
இங்கு நான் தான் கிங்கு
இங்கு நான் தான் கிங்கு

இசையமைப்பாளர் இமான் பேச்சு
“கோபுரம் பிலிம்ஸில் ‘வெள்ளக்கார துரை’ படம் செய்துள்ளேன். ஒரு இடைவேளைக்குப் பிறகு அன்புசெழியன் சாருடன் இணைகிறேன். என் மீது அவருக்கு தனித்த அன்பு இருக்கிறது. இப்படம் மூலம் அறிமுகமாகும் சுஷ்மிதாவிற்கு வாழ்த்துக்கள். இசையில் பல காட்சிகள் சவாலாக இருந்தன. மிக மகிழ்ச்சியாகவும் இருந்தது”.

சுஷ்மிதா அன்புசெழியன் பேச்சு
“என்னை தயாரிப்பாளராக்கிய அப்பாவுக்கு நன்றி. நான் படம் பார்த்து விட்டேன். குடும்பத்தோடு என்ஜாய் செய்து பார்க்கும் படமாக இருக்கும். சந்தானம் சார் கலக்கியிருகிறார். லயா அருமையாக நடித்துள்ளார். ஒரு கலக்கலான விருந்தாக இப்படம் இருக்கும்”.

தயாரிப்பாளர் அன்புசெழியன் பேச்சு
“சந்தானம் சாரை வைத்து ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். இந்தக்கதை வந்த போது சந்தானம் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார். செல்லா இந்தப்படத்தில் எனக்காக வந்து உழைத்து தந்தார் அவருக்கு என் நன்றிகள். அவருடன் படம் செய்ய பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து இன்னும் நிறைய படம் செய்யவுள்ளேன். என் மகள் சுஷ்மிதா இப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள். படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி”.

நடிகர் சந்தானம் பேச்சு..

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபீஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே வீடு வாங்க காசு கேட்டுத்தான்போனேன், ஆனால் படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார். அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக இப்படத்தை எடுத்துள்ளார். சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துக்கள். இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண்.’கட்டா குஸ்தி’ படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள். 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி”.

தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இசை டி.இமான். பாடல்கள் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ், ஒளிப்பதிவு – ஓம் நாராயண், எடிட்டிங் – எம். தியாகராஜன்,
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ், ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல், நடனம் கல்யாண் &பாபா பாஸ்கர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.