அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்தியாவுக்கு ”பென்ஷன்” முறை எப்படி வந்தது தெரியுமா ? ஓய்வூதியம் – குறு வரலாறு ! பாகம் – 01

ஓய்வூதியம் - குறு வரலாறு ! பாகம் – 01

திருச்சியில் அடகு நகையை விற்க

ஓய்வூதியத்தின் வரலாறு நீண்ட நெடியது. 1917 முதல் 1990 வரை உலகம் இரு துருவ உலகமாக இருந்தது. 1917 இல் சோவியத் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு ஆட்சிக்கு வந்த சோசலிச அரசு அரசு ஊழியர் தொழிலாளருக்கான ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்தது. மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களான இலவசக் கல்வி, இலவச மருத்துவம், இலவச போக்குவரத்து, வேலை வாய்ப்பு உத்திரவாதம், வேலை இல்லா இளைஞர்கள் மற்றும் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உதவித் தொகை அறிவித்தது. சோசலிசப் புரட்சி தங்கள் நாடுகளில் வந்துவிடக்கூடாது என்பதற்காக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளருக்கான ஓய்வூதியம் மற்றும் சில மக்கள் நலத் திட்டங்களை அமுல்படுத்தின.

1990 களில் சோவியத் ஒன்றியம் பிரிந்த பின்னர் உலக வங்கி நிர்ப்பந்தம் கொடுக்கத் துவங்கினார்கள். அதன் பின்னர் உலகம் முழுவதும் உள்ள அரசுகள் மக்கள் நலத் திட்டங்களிலிருந்து பின் வாங்கினார்கள். மக்கள் நலத்திட்டத்தின் ஒரு பகுதியான பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாக மாறியது. புதிய ஓய்வூதியத் திட்டம் உலகம் முழுவதும் அமல்படுத்துவது துவங்கியது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

உலக அளவில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்தியாவிலும் அரசு ஊழியர்களில் ஒரு பகுதியினருக்கு ஓய்வூதியமும், தொழிலாளர்களுக்கும் பொதுத்துறை நிறுவன

ஊழியர்களுக்கும், உதவி பெறும் கல்வி நிறுவனம் மற்றும் உள்ளாட்சி நிறுவன ஊழியர்களுக்கும் Provident Fund திட்டம் அமுல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, ஊராட்சி, மின்வாரியம் போன்ற பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. Provident fund திட்டம் தான் உண்டு எனும் நிலை ஏற்பட்டது

Admission Enquiry Form

Buy Soviet Vintage Pension Book Issued in USSR in 1986. Online in India -  Etsyதமிழகத்தில் 1972இல் தான் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கிடைத்தது. அரசு உதவிபெறும் கல்லூரி உதவிபேராசிரியர்களுக்கு 1974 முதலும் ஆசிரியர் அல்லாத அலுவலர்களுக்கு 1976 முதலும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம்போன்ற உள்ளாட்சி

நிதியில் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 1981 முதல் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. மின்வாரியத் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு 1.7.1986 முதல்தான் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. Provident Fund ல் இருந்து ஒவ்வொரு பகுதியினராக ஓய்வூதியத்திற்குள் வந்தனர்.

ஓய்வூதியர்களை ஓய்வூதியத் தேதியின் அடிப்படையில் பிரிக்கும் முயற்சி 1979-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு தாராளமயமாக்கப்பட்ட ஓய்வூதியப் பரிமாற்றம் விதிகள் (Liberalised Commutation rules) 1.4.79-இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 1.4.79 க்கு முன் ஓய்வுபெற்றவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று அறிவித்தது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

DS நகரா மற்றும் ஓய்வூதியர்கள் அதை எதிர்த்து, ஓய்வூதியர்களை ஓய்வூதியத் தேதியின் அடிப்படையில் பிரிப்பது அரசியல் சாசன விதி பதினான்கை மீறுவதால் செல்லுபடியாகாது என்று ஏழு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அதன் பலனை நாம் கடந்த மார்ச் மாதம் வரை அனுபவித்தோம். மார்ச்-25-இல் இயற்றப்பட்டுள்ள சட்டத் திருத்தப்படி ஓய்வூதியர்களை ஓய்வூதியத் தேதியின் அடிப்படையில் பிரிப்பதுமட்டுமின்றி ஓய்வூதியர்களுக்குச் சம்பளக் கமிஷன் வழங்கும் எந்தச் சலுகைகளும் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அனுமதிக்கப்படாது.

உலக வங்கியின் நிர்ப்பந்தத்தால் 1990 துவங்கி இந்தியாவில் மக்கள் நலத்திட்டங்களில் இருந்து மத்திய அரசு தன்னை விடுவித்துக் கொள்ளத் துவங்கியது. இலவசக் கல்வி நிறுவனங்கள் சுயநிதி கல்வி நிறுவனங்களாக மாறின. இலவச மருத்துவம் காப்பீட்டு மருத்துவமாக மாறியது. இலவச சாலை கட்டணச் சாலையாக மாறியது. OUTSOURCING முறை அரசின் அனைத்துத் துறைகளிலும் அமுல்படுத்தப்பட்டது.

இந்தியாவில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) 1.1.2004 முதல் அவசரச் சட்டம் மூலம் அமுல்படுத்தியது. BJP திமுக கூட்டணி அரசு. 1.4.2003 முதல்முன் தேதியிட்டுப் புதிய புதிய ஓய்வூதியத் திட்டத்தை OPS தமிழகத்தில் அமுல்படுத்தியது. ஜெயலலிதா அதிமுக அரசு அவசரச் சட்டம் 6 மாதக் காலத்தில் நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் பெறவேண்டும். 10 ஆண்டுகளாக அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்படவில்லை. 2013 செப்டம்பர் மாதம் தான் அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன் ஒருபகுதியாகப் பயனளிப்பு ஓய்வூதியத் திட்டமானது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாக (NPS) மாற்றப்பட்டது. NPS திட்டத்தில் அரசு ஊழியர் செலுத்தும் 10% மற்றும் அரசு பங்கீடு 10% ம் டெல்லியில் உள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (PFRDA) செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் தவிர்த்துப் பிற மாநிலங்கள் NPS திட்டத்தில் அரசின் பங்கீடாக 14% செலுத்துகின்றன.

(2004-இல் இந்தியாவில் நடைபெற்ற ஆட்சிமாற்றம் ஓய்வூதிய திட்டத்தில் ஏற்படுத்திய பாரிய தாக்கம் குறித்து அடுத்த தொடரில் … )

தொடரும் …

பா.பார்த்தசாரதி, புரவலர்,

அகில இந்திய ஓய்வு பெற்ற பல்கலைக்கழக,

கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFRUCTO) .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.