அறிவோமா வரலாற்று பிழையை…?

-நாஞ்சில் ஜெனிக்ஸ்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அறிவோமா வரலாற்று பிழையை…?

குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது”, என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் அன்றைக்கு திருநெல்வேலி மாவட்டத்தின் ஆஷ்’ என்ற வெள்ளைக்கார கலெக்டர். இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை, சாதி வெறியனான வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Srirangam MLA palaniyandi birthday

ஒரு நாள் ஆஷ்துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.  பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து “துரை அங்கு போகாதீர்கள்”  என்று தடுக்கிறார்.  “ஏன்” என்று வினவிய துரைக்கு “அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை” என்றும் “நீங்கள்அங்கு போகக் கூடாது” என்றும் சொல்லுகிறார்….!!! உடனே ஆஷ் துரை ராவுத்தரை பார்த்து “சரி நீ போய் பார்த்து வா” என்றார்.  சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார்,  “முதல் பிரசவம் துரை.

சின்ன பொண்ணு ரெண்டு நாளா கத்திக்கிட்டு இருக்காளாம், பிள்ளை வயித்துல தலை மாறிக் கிடக்காம். பரிதாபம், இனி எங்கிட்டு துரை பொழைக்கப் போகுது” என்றார்.  ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக் கேட்க, அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா. பின்ன எப்படி வண்டி கட்டி டவுனுக்கு கொண்டு போறது ?  என்றார் ரவுத்தர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ்துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் ஒரு உயிரையேனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டு வண்டியை கொண்டு வருமாறு குதிரையோட்டியைப் பணித்தார் துரை.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

ஓடிப் போன ராவுத்தர் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது, துரையின் வண்டியோட்டி எனத் தெரிந்த ஒரு பார்ப்பனர் வழி மறிக்கிறார். விஷயத்தை சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார்.  அந்த வழியாய் செல்ல வண்டிப்பாதை பிராமணர்களின் அக்கிரஹாரத்தை தாண்டித்தான் சென்றாக வேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டி மறிக்கப்படுகிறது.

ஒரு சேரிப்பெண்ணை ஏற்றிப் போகும் வண்டி இப்பாதை வழியே போகக் கூடாது என்று பார்ப்பனர்கள் வழிமறித்து வழிவிட மறுக்கிறார்கள்…!!! வண்டி கொடுத்த குடி யானவனையும் ஊர் நீக்கம் செய்து விடுவோம் என எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வரச் சொன்னது துரையும் அவரின் மனைவியும் தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள்.

இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர். இதைக் கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். குதிரையோட்டியின் பக்கத்திலேறி அமர்ந்தும் கொண்டார். வண்டி அக்கிரஹாரத்திற்குள் நுழைகிறது. பார்ப்பனர்கள் கூட்டமாய் வழி மறிக்கிறார்கள். “ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்க முடியாது” என்கிறார் கள். வழிவிட சொல்லிப் பார்த்த துரை அவர்கள் வழிவிட மறுக்கவே, வண்டியைக் கிளப்பு என்று உத்தரவிடுகிறார்.

மீறி வழி மறித்த பார்ப்பனர்களின் முதுகுத் தோல் துரை அவர்களின் குதிரை சவுக்கால் புண்ணாக்கப்படுகிறது. அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள். ஆஷ் துரை அவர்களிடம் அடி வாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான்.அவன் பெயர் வாஞ்சிநாதன். அப்போது வாஞ்சிநாதன் எடுத்த சபதம் தான், 17.06.1911 அன்று ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட வஞ்சகமாக அமைந்து விட்டது.

மனித உயிரை விட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கப்பட்டு வருகிறது. இதுவும் “லான் வோனிஸ்” எழுதிய  “Ash. Official Notes” என்னும் குறிப்புகளில் அரசு ஆவணக் காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக் கொண்டிருக்கிறது.

-நாஞ்சில் ஜெனிக்ஸ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.