ஆக்டர் ஆனார் முதல்வரின் டாக்டர்! ‘டபுள் டக்கர் ‘ பட புரமோஷன் சேதிகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 Double Decker  Movie
Double Decker Movie

ஆக்டர் ஆனார் முதல்வரின் டாக்டர்! ‘டபுள் டக்கர் ‘ பட புரமோஷன் சேதிகள் ! ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிப்ரவரி 23-ஆம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

படத்தின் இணைத்  தயாரிப்பாளர் சந்துரு பேசும் போது, “ஒரு மூன்று வருடத்திற்கு முன்பு அவ்வளவு தான் இனி வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்று எண்ணிக் கொண்டு, என் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் இருந்த போது ஒரு கை வந்து என்னைத் தூக்கியது. அது தீரஜ்ஜின் கை. அவர் தான் என்னை முதன்முதலில் திரைக்கதைக்குள் வாருங்கள் என்று அழைத்துப் போனார். அப்படி என்னைக் கைப்பற்றி அழைத்து இன்று இங்கே கூட்டி வந்து விட்டுவிட்டார். மூன்று வருடங்களாக திரைக்கதையில் உழைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

அந்த வீடியோவில் பார்த்திருப்பீர்கள்; பி.எம்.டபிள்யூ, கார் வாங்கலாம். ஆடி கார் வாங்கலாம். ஆனால் அதற்கான எரிபொருள் என்பது எப்போதும் பிரஸ் அண்ட் மீடியாவாகிய நீங்கள் தான். ஏனென்றால் உங்கள் எழுத்திற்குத் தான் ஆடியன்ஸை தியேட்டருக்குள் அழைத்து வரும் வல்லமை இருக்கிறது. அதனால் இப்படத்தினை சப்போர்ட் செய்யுங்கள். .

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

நம் வீடுகளில் ஒரு வழக்கம் இருக்கும். குழந்தைகள் டிவியில் ஆங்கில கார்ட்டூன் சேனல்கள் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் தமிழ் கார்ட்டூன் சேனல் பார்த்துக் கொண்டிருந்தால் உடனே மாற்றிவிடுவோம். ‘டபுள் டக்கர்’ படம் வெளியானதும், இந்த நிலை மாறும். தமிழ் கார்ட்டூனுக்கான மவுசு கூடும் என்று நம்புகிறேன். இது போன்ற கார்ட்டூன் படங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். அப்பொழுது தான் புது முயற்சிகளை துணிந்து நாங்கள் செயல்படுத்துவோம்.

Double Decker | Movie
Double Decker | Movie

படத்தொகுப்பாளர் வெற்றிவேல் பேசும் போது…

இது நான் எடிட்டராக பணியாற்றும் முதல் படம். அஸிஸ்டெண்ட் ஆக பணியாற்றும் போது அங்கு கூட்டத்தில் நின்று மேடையைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இன்று இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. ‘டபுள் டக்கர்’ ஒரு அனிமேஷன் திரைப்படம். எனக்கு காட்சிகள் Empty Plates ஆகத் தான் வரும். அதைக் கொண்டு காட்சிகளை எடிட் செய்வது சவால் நிறைந்தது. இந்த வார்த்தை எல்லோரும் சொல்லக் கூடியது தான். ஆனால் படம் பார்க்கும் போது அந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். இப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு என் நன்றி. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

நாயகி ஸ்ம்ருதி வெங்கட் பேசும் போது…

“இந்த புராஜெக்ட்டில் நானும் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் சார் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். இப்படத்தின் இணை தயாரிப்பாளர் சந்துரு சார் அவர்களுக்கு நன்றி. அவர் மிகவும் அமைதியானவர்., ஆனால் எங்கள் ஹீரோ தீரஜ் அப்படியே நேர் எதிரானவர். அவர் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார். எங்கள் இயக்குநர் மீரா மஹதி எவ்வளவு கூலான இயக்குநர் என்பதை அந்த வீடியோவில் நீங்களே பார்த்திருப்பீர்கள். முழு படப்பிடிப்பையும் எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் கலகலப்பாக கொண்டு போனார். இந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த நிகில் சார் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு பத்திரிகை நண்பர்களாகிய உங்களின் ஆதரவு தேவை. எங்கள் படத்திற்கு மிகச்சிறந்த ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

படத்தின் இயக்குநர் மீரா மஹதி பேசும் போது…

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

” பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம். மைம் கோபி சார் தான் என்னை தீரஜ் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.தீரஜ் சார் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை, நீ என்ன சாதி..? என்ன மதம்…? யாரிடம் வேலை பார்த்தாய்..? என்று எதுவுமே என்னிடம் கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாம் ஐந்து நிமிடத்தில் என்னை உன்னால் இம்ப்ரஸ் செய்ய முடியுமா..? என்று கேட்டார். நான் அந்த ஐந்து நிமிடத்தைத் தான் யாரும் எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் சார் என்று சொன்னேன். அவர் கொடுத்தார். நான் கதை சொல்லத் துவங்கினேன். கதை சொல்லி முடிக்கும் போது 1 மணி நேரம் ஆகியிருந்தது. ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தீரஜ் சார் என்னிடம் கதை கேட்டார்.

ஆரம்பிக்கும் போது இப்படம் சிறிய படமாகத் தான் இருந்தது. படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளை நான் ஏற்கனவே மனதில் டிசைன் செய்து வைத்திருந்தேன். பிறகு படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளைப் பற்றிக் கேட்டுவிட்டு தீரஜ் சார், இது சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும், நாம் இதை கண்டிப்பாக பெரிய அளவில் செய்வோம் என்று கூறி படத்தின் பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்திவிட்டார். பின்னர் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் எல்லாம் வந்த பின்னர் படத்தின் பட்ஜெட் இன்னும் கொஞ்சம் அதிகமானது.

எனது முதல் மேடையிலேயே மிஷ்கின் சார் அமர்ந்திருப்பதை நான் என் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும், இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஈடு இணையின்றி உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். என்னைப் போல் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு பத்திரிகை நண்பர்கள் ஆதரவு கொடுங்கள். நீங்கள் சொல்வதையும் எழுதுவதையும் தான் மக்கள் நம்பி திரையரங்கிற்கு வருவார்கள். நாங்கள் எவ்வளவு சொன்னாலும் மக்கள் நம்பமாட்டார்கள். நீங்கள் சொல்வதைத் தான் நம்புவார்கள். ‘டபுள் டக்கர்’ படத்தைப் பற்றி எழுதி எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

 Double Decker | Movie
Double Decker | Movie

இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் பேசும் போது…

“காலதாமதமாக வந்ததற்கு முதலில் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் செல்போனை அணைத்து வைத்துவிட்டு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்தேன். எதேச்சையாக போனை ஆன் செய்த போது தீரஜ் இடம் இருந்து போன் வந்தது. தொடர்ச்சியாக ஷூட்டிங்கும் இருந்தது. இன்று 2 மணியிலிருந்து 10 மணி வரை கால்ஷீட்.  ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டேன். ஏனென்றால் தீரஜ்ஜை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். சற்றும் தலைக்கணம் இல்லாதவன், மிகுந்த அன்பு கொண்டவன், எளிமையாகப் பழகக்கூடியவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.

ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான்.

என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம் பெறும் போது, அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான். மிக எளிமையாக எனக்கு அது குறித்து விளக்கம் கொடுப்பான். இயல்பாகவே கலகலப்பான பையன் அவன். படங்களும் ஜனரஞ்சகமாக, கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவான்.

இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இப்படத்திற்கு ஆதரவு கொடுங்கள். நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுவீர்கள் என்று தெரியும். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என்றார் உருக்கமாக.

 Double Decker  Movie
Double Decker Movie

படத்தின் நாயகன் தீரஜ் பேசும் போது,

“என்ன பேசுவது, எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. மிஷ்கின் சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய பேச்சு இன்று அட்டகாசமாக இருந்தது. Heartல் துவங்கி  Art வரைக்கும் எல்லாவற்றையும் பற்றி பேசிவிட்டீர்கள். இன்று நீங்கள் இந்த மேடையிலிருப்பது இந்த நிகழ்வை மேலும் சிறப்புமிக்கதாக்குகிறது. சந்துரு என் முதல் படத்தின் இயக்குநர். திரைப்படத்திற்கு சென்சிட்டிவான விசயங்கள் மட்டும் போதாது, கமர்ஷியல் சக்சஸ் அடைய வேறு ஏதோவொன்று தேவை என்பதைப் புரிந்து கொண்டு, பேப்பர் ராக்கெட் நிறுவனத்தில் போய் புரொடெக்ஷன் மேனேஜராக பணியாற்றிவிட்டு வந்தார். ‘பிள்ளையார் சுழி’ படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது தான் இயக்குநர் மீரா என்னிடம் கதை சொல்ல வந்தார். ஐந்து நிமிடத்துக்குள் என்னை இம்ப்ரஸ் செய் என்று சொன்னேன். அவர் நான் ஸ்டாப்பாக என்னை சிரிக்க வைக்கத் துவங்கினார். மீரா மகதி இங்கு இருப்பதற்குநீங்கள் தான் காரணம். இப்படத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டியது பத்திரிகையாளர்களாகிய உங்களுடைய கடமை. படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை நாங்கள் கேட்காமலே நீங்கள் செய்வீர்கள் என்று அறிவோம். இருப்பினும் இப்படத்திற்கு உங்களின் ஆதரவைத் தந்து உதவுங்கள்” என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.