மதுரைக்கு பெருமை சேர்த்த சிறுவர்களை நேரில் அழைத்து பாராட்டிய டாக்டர் சரவணன் !
சர்வதேச அளவில் நடைபெற்ற வளரி போட்டியில் இரண்டாவது பரிசு பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்த சிறுவர்களை டாக்டர் சரவணன் நேரில் அழைத்துபொன்னாடை போர்த்திபாராட்டினார்
மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையில் மாஸ்டர் முத்துமாரி இளைஞர்களுக்கு இலவசமாக சிலம்பம், வளரி, உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறார்இந்த நிலையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வைத்து மாவட்ட அளவில் நடைபெற்ற வளரி போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற சிறுவர்களை மாநில அளவில் நடைபெற்ற வளரி போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர்
சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் ஜெய் கிருஷ்ணா ஆகிய இரு மாணவர்கள் தேர்வு பெற்றனர்இவர்களுக்கு மாஸ்டர் முத்துமாரி தீவிர பயிற்சி அளித்தார். கடந்த வாரம் உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா சிகே ஓவல் கிரிக்கெட் கிரவுண்டில் சர்வதேச அளவில் வளரி போட்டியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, டெல்லி, நெய்டா ,மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம்உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த , ரோஜர் பெரி ,கெளஷிக்ஹோண்டா ஆகிய இருவர் முதல் பரிசும், தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த ஜெய் கிருஷ்ணா, சிவகார்த்திகேயன்ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்று மதுரை வளரி கலைக்கு பெருமை சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇரண்டாம் பரிசு பெற்று மதுரை வந்த சிவகார்த்திகேயன் ஜெய் கிருஷ்ணா இருவர் மற்றும் பயிற்சியாளர் முத்துமாரியை திருப்பரங்குன்றம் தொகுதி திமுகமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன்நேரில் வரவழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களைதெரிவித்தார்…
– ஷாகுல் மதுரை