”கதறக் கதற 100—ஆவது நாள் விழா!”- இதென்னடா புது டிரெண்டா இருக்கு?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து டைரக்‌ஷனில் பிரதீப் ரங்கநாதன் –கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘டிராகன்’ படம் 2025 பிப்ரவரி மாதம் ரிலீசாகி, வசூலில் சக்கைப்போடு போட்டது. இதனால் செம ஹேப்பியான கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்தின் 100—ஆவது நாள் விழாவை கடந்த சனிக்கிழமை  பிரம்மாண்டமாக கொண்டாடினார். சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீமுக்தா வெங்கட சுப்பாராவ் அரங்கில் மாலை 5 மணிக்கெல்லாம் விழா ஆரம்பித்தது.

‘டிராகன்’ பட விழா‘டிராகனில்’ வேலை செய்த லைட்மேன் முதல் ஒளிப்பதிவாளர் வரை, காஎர்பெண்டர் முதல் ஆர்ட் டைரக்டர் வரை, துணை நடிகர் முதல் ஹீரோ வரை, உதவி இயக்குனர்கள் முதல் இயக்குனர் வரை, கீபோர்டு வாசிப்பவரிலிருந்து மியூசிக் டைரக்டர் வரை, புரொடக்‌ஷன் அசிஸ்டெண்ட் முதல் தலைமை தயாரிப்பு நிர்வாகி வரை, ஆபீஸ் அசிஸ்டெண்ட் முதல் சீஃப் மேனேஜர் வரை என 240 பேருக்கு அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து, ஹீரோ பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இணைந்து 100—ஆவது நாள் விழா கேடயங்களை வழங்கி கெளரவித்தனர்.  இதுபோக படத்தை தமிழ்நாடெங்கும் வினியோகித்தவர்கள், திரையரங்க உரிமையாளர்கள், என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கும்  கேடயம் வழங்கப்பட்டது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

இரவு 9 மணி வரை கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்த பின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் ஏஜிஎஸ்.சின் தலைமை நிதி அதிகாரியான ரங்கராஜன்.

தியேட்டர் அதிபர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பிரதீப் ரங்கநாதனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துவதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்கள் சென்னை குரோம்பேட்டை வெற்றி—ராகேஷ், வடபழனி கமலா தியேட்டர்களின் ஓனர்களான ராகேஷும் விஷ்ணுவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அர்ச்சனா கல்பாத்தி,

“இந்தப் படத்திற்கு மக்களின் மவுத் டாக் எப்படி வெற்றிக்கு துணையாக இருந்ததோ, அதே அளவிற்கு மீடியாக்களின் ஆதரவும் இருந்தது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது மீடியாக்கள் தான். இதற்காக எனது மனமார்ந்த நன்றி”.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

 இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து,

“ஒரு கலைஞனுக்கு தயாரிப்பாளர் அல்லது டைரக்டர் அல்லது ஹீரோ கையால் விருது வாங்க வேண்டும் என்பது தான் ஆசையும் கனவும். இந்த இரண்டையும் நிறைவேற்றிய ஏஜிஎஸ்ஸுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது”.

‘டிராகன்’ பட விழாஹீரோ பிரதீப் ரங்கநாதன், “இதே ஏஜிஎஸ் தயாரிப்பில் நான் நடித்து டைரக்ட் பண்ணிய ‘லவ்டுடே’ படத்தின் 100-ஆவது நாள் விழாவும் இதே அரங்கில் தான் நடந்தது. இப்போது ’டிராகன்’ 100—ஆவது நாள் விழாவும் இங்கு தான் நடக்கிறது. இப்படத்தை டைரக்ட் பண்ணிய எனது நண்பன் அஸ்வத்துக்கும் இந்த பிரம்மாண்ட வெற்றிப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் வெற்றிப்படமாக்கிய மீடியாக்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்”.

சரி இப்ப டைட்டிலுக்கு வருவோம்…

விழா நடந்த பள்ளி வளாகம் முழுவதும் ”கதறக் கதற 100—ஆவது நாள் விழா” என ஆங்கிலத்தில் ஃப்ளக்ஸ் பேனர்களை சகட்டுமேனிக்கு வைத்திருந்தார்கள். இதென்னடா புது டிரெண்டா இருக்கு? ரொம்பவும் மகிழ்ச்சியான விழா தானே.. இதுக்கு ஏன் கதறணும்?

நல்லா கிளப்புறாய்ங்கடா பீதிய…

 

—    மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.