அங்குசம் பார்வையில் ‘டிராகன்’    

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘ஏ.ஜி.எஸ். எண்டெர்டெய்மெண்ட்’ கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ். தயாரிப்பு உருவாக்கம் : அர்ச்சனா கல்பாத்தி, இணைத் தயாரிப்பாளர் : ஐஸ்வர்யா கல்பாத்தி. எழுத்து –இயக்கம் : அஷ்வத் மாரிமுத்து. நடிகர்-நடிகைகள் : பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாது லோஹர், ‘வி.ஜே.சித்து, ஹர்ஷத்கான், கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், பி.எல்.தேனப்பன், ஜார்ஜ் மரியான், இந்துமதி, ‘லிப்ரா’ ரவீந்திரன், சினேகா [ டாக்ராக ஒரு காட்சியில் ]  கதை: அஷ்வத் மாரிமுத்து & பிரதீப் ரங்கநாதன். ஒளிப்பதிவு : நிகேத் பொம்மி, இசை : லியோன் ஜேம்ஸ், எடிட்டிங் : பிரதீப் ராகவன், நடனம் : பிருந்தா, சாண்டி, அஸார், ஜேடி, ஸ்டண்ட் : விக்கி & திலீப் சுப்பராயன், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம். பி.ஆர்.ஓ : நிகில் முருகன்.

'டிராகன்’
‘டிராகன்’

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

ப்ளஸ் டூவில் கோல்டு மெடலிஸ்டாக வரும்  நடுத்தரவர்க்க ராகவனுக்கு  [ பிரதீப் ரங்கநாதன் ] உயர்படிப்பு முடித்து லைஃப் பார்ட்டனருடன் அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என்பது தான் கனவு, லட்சியம். தன்னுடன் படிக்கும் பெண்ணிடமும் இதைச் சொல்லி அவளையே லவ் பண்ணுவதாகச் சொல்கிறான். ஆனால் அவளோ “எனக்கு பேட் பாய்ஸைத்தான் பிடிக்கும்” என்கிறாள். ”ரைட்டு இவளுகளுக்கு சாஃப்ட் பாய்ஸ் செட்டாகாது போல” என்ற முடிவுடன் காலேஜில் சேர்கிறான். ராகவனை ‘டிராகனா’க்கி ரக்டு ஸ்டூண்டாக்குகிறான் சக நண்பனான அன்பு  [விஜே]. இந்த ‘ரக்டு’ ராகவன் தான் கீர்த்தியை [ அனுபமா பரமேஸ்வரன் ] லல் ப்ரபோஸ் பண்ண வைக்கிறது.

ஆனால் அவளது பெற்றோர் கைநிறைய சம்பளம் வாங்கும் வேறொரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். கீர்த்தியும் ராகவனுக்கு ‘குட்பை’ சொல்கிறாள். அதன் பின் நடக்கும் ஃபுல் & ஃபுல் பியூட்டி லவ் & பாஸிட்டிவிட்டி எனெர்ஜி ஸ்கிரிப்ட் தான் இந்த ‘டிராகன்’.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தாங்கள் கையில் எடுத்த கதைக்காக சீரான திரைக்கதைப்  பாதையைத் தேர்ந்தெடுத்து, அதிலிருந்து கொஞ்சமும் ட்ராக் மாறாமல், பார்வையாளர்களையும் வேறு ட்ராக்கிற்கு மாறவிடாமல் [ அதாங்க, படம் பார்த்துக்கிட்டிருக்கும் ஃபுல் டைமும் செல்போனைப் பார்ப்பது, எந்திரிச்சு பாத்ரூமுக்குப் போவது  ] இந்த ‘டிராகனை’ காண்பித்தற்காக கதாசிரியர்கள் பிரதீப் ரங்கநாதனையும் அஷ்வத் மாரிமுத்துவையும் மனம் நிறைய மகிழ்வுடன் பாராட்டலாம்.

‘டிராகன்’ முதல் படமான ‘கோமாளி’யில் ‘காரியக்கார’ டைரக்டராக கவனம் ஈர்த்தார் பிரதீப் ரங்கநாதன். அடுத்து ‘லவ் டுடே’வில் டைரக்டராக, ஹீரோவாக, ட்ரெண்ட் செட்டராக மாறி ஹிட்டடித்தார். இந்த ‘டிராகன்’ மூலம் நல்ல நடிப்பு பெர்ஃபாமராக ‘ஹாட்ரிக் ஹிட்’ அடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். மாதம் 18 ஆயிரம் சம்பளம் என அம்மா-அப்பா [ ஜார்ஜ் மரியான், இந்துமதி ]விடம் பொய் சொல்லி ஃபரண்ட்ஸ்களின் ரூமில் சரக்கும் தம்முமாக கும்மியடிப்பது, அனுபமா பரமேஸ்வரன் இவரை பிரேக்கப் பண்ணியதும் கொட்டும் மழையில் குமுறியழுவது, ஃபோர்ஜரி சர்டிபிகேட் மேட்டர் அம்பலமாகும் போது ரூமுக்குள் வெறித்தனமாக பயந்து அலறி வாட்டர் கேனைக் கவிழ்த்து தண்ணி குடிப்பது, இடுப்பில் கட்டிய துண்டுடன் ஓடுவது, கயாது லோஹரிடம் தனது ஃபிராடுத்தனத்தைச் சொல்லிக் கலங்குவது, மீண்டும் வந்த அனுபமா, பிரதீப்பிடம்  அனுதாபம் காட்டியபின் உருகுவது,  க்ளைமாக்ஸில் அம்மா—அப்பாவிடம் மண்டியிட்டு அழுவது, என வெரைட்டியாக வெளுத்துக்கட்டிவிட்டார் பிரதீப் ரங்கநாதன். இன்னும் சொல்லப் போனால் டிராகனைவிட ராகவன் தான் ஜெயித்திருக்கிறார்.   வெல்டன் சகோதரா.  கீப் இட் அப் வித் கேர்ஃபுல்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கதையின் நாயகி அனுபமா பரமேஸ்வரனுக்கு படத்தின் பின்பாதியில் தான் வெயிட்டான ப்ளேஸ் என்றாலும் அந்த ப்ளேஸில் எல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறார். அதுக்காக கயாது லோஹரை நாம விட்டுக்கொடுத்துர முடியுமா? கோடீஸ்வரர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகளாக, ஹைகிளாஸ் சொசைட்டியின் ஜிலுஜிலு யுவதியாக மனதை ஜில்லிட வைத்துவிட்டார் கயாது.

பிரதீப் வைத்திருக்கும் 48 அரியர்ஸை பாஸ் பண்ண வைக்கும் காலேஜ் பிரின்சிபலாக மிஷ்கின். மனுசன் சினிமா மேடைகளில் தான் ஏடாகூடமாகப் பேசுறாரே தவிர, இந்த டிராகன் ஸ்கிரீனில் அன்பிற்குரிய சர்வாதிரியாக நடிப்பில் மிரட்டிவிட்டார். அதே போல் பிரதீப் ஆபீஸின் ஹெட்டாக கெளதம் வாசுதேவ் மேனன், பிரதீப்பின் நண்பர்களாக விஜே சித்து, ஹர்ஷத்கான், என எல்லா கேரக்டர்களுமே தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாகவே வழங்கியுள்ளார்கள்.

கேமராமேன் நிகேத் பொம்மியும் அறிமுக இசையமைப்பாளர் லியோன் ஜோன்ஸும் டிராகனின் பில்லர்ஸ்.

‘டிராகன்’ ”ஒன்னோட ஆக்டிவிட்டீஸ் லவ்வுக்குத் தான் செட்டாகும், லைஃப்ஃபுக்கு யூஸ் ஆகாது”, குறுக்கு வழியில் போறவன் அப்போதைக்கு ஜெயிப்பான், ஆனா மாட்டிக்குவான்”, “நான் ஜெயிக்கணும்கிறதுக்காக கெட்ட வேலைகளைப் பண்ணினேன், ஆனா அடுத்தவனோட வாழ்க்கையைக் கெடுத்து நான் வாழணும்கிற அளவுக்கு கேடுகெட்டவனில்ல” வசனகர்த்தாவாக, சமூக அக்கறைமிக்க இயக்குனராக இன்றைய டிஜிட்டல் தலைமுறைக்கு  நல்நம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறார் அஷ்வத் மாரிமுத்து. வாழ்க வளமுடன்.

மிக மிக முக்கிய கடைசி வரிகள் : மெகா ஹீரோக்கள், மெகா டைரக்டர்கள், 300 கோடி, 400 கோடி பட்ஜெட் இதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்த மாதிரியான சினிமாக்களை ஏஜிஎஸ் பிரதர்ஸ் தொடர்ந்து தயாரித்தால், பலரும் இதைத் தொடர்வார்கள். இளம் இயக்குனர்கள் புதிய சிந்தனையுடன் வருவார்கள், வாழ்வார்கள், சினிமாவும் வாழும், மக்களும் வாழவைப்பார்கள்.

 

—  மதுரை மாறன்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.