பிளாக்கில் சரக்கு விற்று கைதான திராவிடமணி சிறையில் மரணம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் சட்டவிரோதமாக மதுபான விற்பணையில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட திராவிடமணி என்பவர் சிறையில் இறந்துவிட்ட நிலையில், போலீசார் தாக்கியதால்தான் அவர் இறந்துவிட்டார் என்றுகூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தியிருப்பது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தின் எஸ்.பி. வருண்குமாரின் கட்டுப்பாட்டின் கீழான தனிப்படை போலீசாரின் நடவடிக்கையால் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதால், திராவிடமணி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் நேரடியாகவே தலையிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

திராவிடமணி
திராவிடமணி

சீமான் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? இல்லை மன்னராட்சியா? அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறையின் அத்துமீறிய கைதுக்கு எதிராகக் கொதித்தெழுந்து, அடக்குமுறையை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்திய திமுக அரசு, தம்பி திராவிட மணியின் படுகொலைக்கு என்ன பதில் கூறப்போகிறது? அமைச்சருக்கு ஒரு நீதி? சாமானிய மக்களுக்கு வேறு நீதியா?” என்றெல்லாம் வழக்கம் போல முஷ்டி உயர்த்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்நிலையில், திராவிடமணி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதாக, தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்த விரிவான அறிக்கை ஒன்றை திருச்சி மாவட்ட போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையில், “கடந்த 26.09.2024-ம் தேதி 18.00 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு, முத்தரசநல்லூர் இரயில்வே சுரங்கப்பாதை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஜீயபுரம் காவல்நிலைய ஆளிநர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.

அங்கு இருந்த சந்தேக நபர், காவலர்களை கண்டதும் தப்பியோட முயன்றவரை பிடித்து விசாரணை செய்தபோது, மேற்படி நபர் பமூர் கிராம், காந்தி நகர் பகுதியை சேர்ந்த மருதமுத்து மகன் திராவிடமணி 40/24 எனவும், TN 45 K 4956 பஜாஜ் என்ற இருச்சக்கர வாகனத்தில் 66 மதுபான பாட்டில்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது.

மேலும், தொடர் விசாரணையில் மேற்படி திராவிடமணி, முத்தரசநல்லூரை சேர்ந்த சுதாகர் (எ) நீச்சல் என்பவருடன் சேர்ந்து அரசு மதுபான பாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இது தொடர்பாக, மேற்படி நபர்கள் மீது ஜியபுரம் காவல் நிலைய குற்ற எண் 261/24 படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இவ்வழக்கில் மேற்படி திராவிடமணியை ஏ1 எதிரியாகவும், தலைமறைவாக இருக்கும் சுதாகர் (எ) நீச்சல் என்பவரை ஏ2 எதிரியாகவும் சேர்க்கப்பட்டு, உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி மேற்படி ஏ1 திராவிடமணி கைது செய்யப்பட்டார்.

பின்பு, அரசு மருத்துவரின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, மருத்துவரால் நீதிமன்ற காவலுக்கு தகுதியானவர் என உடற்தகுதி சான்று பெற்றும், மேலும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அவரது சுய ஒப்புதல் வாக்குமூலம் பெற்றும், மேற்படி நபரை, கணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-3 அவர்கள் முன் ஆஜர்படுத்தி, 1௦.10.2024-ம் தேதி வரை நீதிமன்ற காவல் பெறப்பட்டு, 26.09.2024-ம் தேதி நல்லமுறையில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

திருச்சி மத்திய சிறையில் காவலில் இருந்தபோது, திராவிடமணிக்கு 28.09.2024 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மத்திய சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், திருச்சி அரசு மருத்துவமனையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக திருச்சி மத்திய சிறை அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாநகரம், கே.கே நகர் காவல் நிலைய குற்ற எண் 400/24, வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்ட நடைமுறைகளின் அடிப்படையில், வழக்கானது. கணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களுக்க அனுப்பப்பட்டது. பிரேத விசாரணையானது, கணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-6 அவர்கள் முன்னிலையில், மருத்துவ குழுவினர்களால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேற்படி பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோபதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கையின் விபரம் பெறப்படவில்லை.

கணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை, மருத்துவர்கள் குழுவின் பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து சட்ட நடைமுறைகளும் திராவிட மணியின் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையில் முறையாகவே பின்பற்றப்பட்டது என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. பிரேத பரிசோதனை. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் கணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

நீதிமன்ற நடுவர் முன்பாகவும், வீடியோ பதிவுகளுடன் திராவிடமணியின் உடற்கூராய்வு நிகழ்ந்துள்ள நிலையில், அதன் இறுதி அறிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

 

–    அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.