அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிப்ரவரி 14 -ல் ‘ட்ரீம் கேர்ள்’ ரிலீஸ்!

திருச்சியில் அடகு நகையை விற்க

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார் மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர்  எம். ஆர். பாரதி பேசும்போது,

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“இது ஒரு காதல் கதை கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு.

Dream Girl Movieஇப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் போகவிட்டு மகிழ்ச்சியின் தருணங்களை ஒரு சொட்டு கூட வீணடிக்காமல் வாழத் துடிப்பவர்கள் அவர்களுக்குள் காதல் வருகிறது.

முதல்வர் பிறந்தநாள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு  கனவும் வருகிறது. அது சில மாயங்களைச் செய்கிறது. அதன்  வர்ணஜால விளைவுகளைச் சொல்வதுதான் ‘ட்ரீம் கேர்ள்’ படம்.

இது  ஒரு முழுமையான காதல் கதை.படத்தில் வில்லனே கிடையாது, வேண்டுமானால் கனவு தான் வில்லன் என்று கூறலாம்.

கதையில் குளுமை இருப்பதால் இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ஊட்டியிலேயே நடத்த திட்டமிட்டேன். அதன்படியே நடைபெற்றுள்ளது “என்கிறார்.

ஒளிப்பதிவு :சாலமன் போவாஸ் இளமாறன், வசனம்: ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம்,எம். டி .தமிழரசன், தயாரிப்பு வடிவமைப்பு :எஸ் .ரதி, திரைக்கதை :எம்.டி. தமிழரசன்  கிருத்திகா தாஸ்,எடிட்டிங் :எஸ். பி .அஹமத், இணை இயக்கம்: எம்.பொன் புவனேஸ்வரன்.

—   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.