அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அனுமதியின்றி பறந்த ட்ரோன் கேமரா ! பரபரப்பை ஏற்படுத்திய வாலியா் கைது !

திருச்சியில் அடகு நகையை விற்க

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை 6 மணி அளவில், திருப்பரங்குன்றம் சட்டம் & ஒழுங்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சிவப்பிரகாசம் தலைமையிலான காவல்துறை குழுவினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கோபுரத்தின் முன்பு ஒருநபர் எவ்விதமான அனுமதி இன்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்டுக் கொண்டிருந்ததை அதிகாரிகள் கவனித்தனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருப்பரங்குன்ற மலை
திருப்பரங்குன்ற மலை

திருப்பரங்குன்றம் மலையை சுற்றி  ட்ரோன் பறக்கவிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் விசாரணையில் அவர் மதுரை மேல மாசி வீதியைச்சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் சக்திவேல்  என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சக்திவேல் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது  செய்தனர். திருப்பரங்குன்றம் மலை மற்றும் கோவில் பகுதி மீது ட்ரோன் பறக்க விட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் பிறந்தநாள்

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.