நடுரோட்டில் போதையில் குத்தாட்டம் – எஸ்ஐ கன்னத்தில் குத்துவிட்ட இருவர் கைது !
மதுபோதையில் இருந்த கும்பல் ஒன்று காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
திருப்பத்தூர் : தாலுக்கா ஸ்டேஷனில் துணை காவல் ஆய்வாளராக பனிப்புரிபவர் “வெங்கடேசன்” கடந்த டிசம்பர்-21 சனிக்கிழமையன்று இரவு 10 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்,
அப்போது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள “கவுதம் பேட்டை அடுத்த . “அண்ணா நகர் பகுதியில் ஒரு கும்பல் நடு ரோட்டில் ஆடிப்பாடி கூச்சலிட்டப்படி, அந்த கும்பலிலிருந்த ஒருவனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியபடி இருந்துள்ளது.
மேலும், அந்த கும்பல் குடித்துவிட்டு ரோட்டில் சென்ற பெண்களை , வம்பிழுத்தப்படியும் இருந்துள்ளனர் , அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட தாலுக்கா ஸ்டேஷன் துணை காவல் ஆய்வாளர் வெங்கடேசன் அந்த கும்பலை தட்டி கேட்டிருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, அந்த கும்பலில் இருந்த “சந்துரு” மற்றும் கோகுல்ராஜ் எஸ் ஐயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள் ஒரு கட்டத்தில், குடிபோதையில் இருந்த “சந்த்ரு” எஸ்ஐ கண்ணத்தில் “பாளார்’ என குத்து விட்டு ஓடியுள்ளான்.
இதனையடுத்து, எஸ்ஐ’யை தாக்கிய சந்துரு மற்றும் அந்த கும்பல் மீது திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் , கொலை முயற்சி, மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தனிப்படையமைத்து தேடி வந்தனர்.
ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த சம்பவத்தை, “எஸ்.ஐ கன்னத்தில் குத்துவிட்ட திமுக பிரமுகர் தலைமறைவு? போலீஸ் துன்புறுத்துவதாக நாதக பிரமுகர் பரபரப்பு புகார்” !! என்னும் தலைப்பில்,
எஸ்ஐ கன்னத்தில் அறைந்து, வாயில் குத்துவிட்ட திமுக பிரமுகர் “சந்துரு”வை கைது செய்யாமல் இருப்பதும் , அந்த பகுதியில் உள்ள சில திமுக பிரமுகர்களே அவனுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருவதுமாக சில காவலர்கள் குமுறி வருகின்றனர். மேலும் தப்பியோடிய குற்றவாளியை பிடிக்காமல், அவர் குடும்பத்தினரையும் . அவரைச் சார்ந்த நண்பர்களையும் , அழைத்து சென்று போலீஸ் துன்புறுத்துவது எந்த வகையில் ஞாயம், இது அராஜக செயல், என்கின்றார்கள் மனித உரிமை ஆர்வலர்கள் என *அங்குசம் மட்டுமே செய்தி வெளியிட்டிருந்தது *
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிலையில் , நாதக பிரமுகர் கார்த்திக்’கை விட்டுவிட்டு, எஸ்ஐ’யை தாக்கிய சந்துரு மற்றும் கோகுல்ராஜ் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சென்னை சென்று நேற்று காலை (ஜனவரி 7 ) கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் அந்த கும்பலில் இருந்த மற்றவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் .
– மணிகண்டன்.