அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ… வரவேற்ற தவெகவினர் … குஷியான எடப்பாடி !

திருச்சியில் அடகு நகையை விற்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜகவினர் விஜய்க்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் அமித்ஷாவை சந்தித்த செய்திகளும் வெளியான நிலையில்  தர்மபுரி கூட்டத்தில்  எடப்பாடி,  விஜய்  படங்களோடு பேனர் வைத்தும்  தவெக கொடி அசைத்து வரவேற்றனர். அத்தோடு அதிமுக நிர்வாகிகள்  மேளதாளத்துக்கு ஏற்றவாறு குத்தாட்டம் போட்டு  அசத்தி பழனிச்சாமியை அதிமுக பாஜக மற்றும் தவெகவினர்  திக்கு முக்காட வைத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்-03 அன்று தருமபுரி மாவட்டத்தில் ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தருமபுரி  பாப்பிரெட்டிப்பட்டி மற்றும்  “அரூர் சட்டப் பேரவை தொகுதிகளில், பொதுமக்கள் மத்தியில் பேசும்போது”  …

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதியை வெல்லப்போவதாக ஸ்டாலின்  கனவு காண்கிறார். இந்த கூட்டமே அடுத்தாண்டு அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்பதற்கு சாட்சியாக உள்ளது .  ஸ்டாலின் கூட்டணியை நம்பிக்கொண்டு இருக்கிறார். அதுமட்டும் போதுமா, மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும். மக்கள் நினைத்தால்தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும். ஒருபோதும் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறாது.  2021 சட்டமன்றத்  தேர்தல் அறிக்கையில், 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10 % கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். எனது சுற்றுப் பயணத்தில் 166-வது தொகுதியாக அரூரில் பேசுகிறேன். பல தொகுதியில் பேசும்போது ஒரு காவலர் கூட பார்க்கவில்லை.

எடப்பாடி கூட்டம்ஆனால், அரூரில் பாதுகாப்பு கொடுப்பது  எனக்கே ஆச்சரியம். இந்த பாதுகாப்பை மற்ற கட்சிக்கும் வழங்கியிருந்தால், 41 உயிர் பறி போயிருக்காது. எதுக்கு இந்த ஓரவஞ்சணை? நான் காவல்துறையை குறை சொல்லவில்லை. அதை இயக்குபவர் ஸ்டாலின் தான்.  சட்டம்  ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளேயில்லை. சிறுமி முதல் பாட்டி வரைக்கும் பாதுகாப்பில்லை”.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

“கரூர் விசாரணை அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில், அதிமுக அடுத்த வருஷம் ஆட்சியில் அமரும் போது தண்டிக்கப்படுவீர்கள் என ஒரு போடு போட்டு, அரூர் அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். “பை…பை… ஸ்டாலின் என கூறிவிட்டு  ” பாய்…  பாய்” …என  கையசத்தப்படி கிளம்பி சென்றார்.

கோவிந்தசாமி குத்தாட்டம்

முன்னதாக , பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு சென்ற  பழனிச்சாமியை வரவேற்று  அந்த தொகுதி எம்எல்ஏ “கோவிந்தசாமி,  தனது  பரிவாரங்களுடன் மேளதாளத்துக்கு ஏற்றவாறு  வளைந்து நெளிந்து குத்தாட்டம் போட்டு உற்சாகப்படுத்தினார்.

அதேபோல் அரூரில் நடைபெற்ற கூட்டத்தில்   திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவீர்களா?  என்று எடப்பாடி பழனிசாமி கேட்டபோது விஜய் கட்சியினரும், ‘அனுப்புவோம்’ என்று  ‘தவெக கொடியை”  அசைத்து ஆதரவு தெரிவித்தனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பழனிச்சாமியை வரவேற்ற விஜய் கட்சியினர்

மேலும், பாலக்காடு – பென்னாகரம் தொகுதிகளில் அக் 3-ந்தேதி பிரச்சாரத்திற்கு சென்ற பழனிச்சாமியை   வரவேற்று “காரிமங்கலம் மேற்கு ஒன்றிய தவெக இளைஞரணி அமைப்பாளர் டி. செல்வம்”  என்பவர்,  விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி படத்தோடு  பேனர் வைத்து வரவேற்றிருந்தார் . பின்னர் அந்த பேனர் மாவட்ட தவெக நிர்வாகி கேட்டுக் கொண்டதின் பேரில்  வைத்தவரே பேனரை அப்புறப்படுத்தியதாக கூறப்பட்டது. பாலக்கோடு பென்னாகரம் தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி கண்முன்னே தவெக கொடிகள் காணப்பட்டது.

விஜய் தனது பரப்புரையில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில்,  பழனிச்சாமிக்கு  விஜய் கட்சியினர் பேனரோடு கொடியசைத்து வரவேற்றது  அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து திமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “இது போன்று ஒரு கட்சியில் இருந்துக் கொண்டு மற்றொரு கட்சிக்கு ஆதரவாக இருப்பது இங்கு புதியது அல்ல. இங்கு  ஜாதி அரசியலால்  பின்னப்பட்டது. பாமக.  அதிமுக போன்ற கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களாகத்தான் அதிகமானோர் பொறுப்பாளர்களாக இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேர்தல் வரும்போது, பாமக. அதிமுக மீது  பாசம் வந்துவிடும்.  திமுகவினர் வாக்குகளை அதிமுக, பாமக வேட்பாளர்களுக்கு மடை மாற்றுவார்கள். அதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அஜெண்டா. இது எங்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கும் தெரியும் கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றனர்.

எடப்பாடி கூட்டம்சமீபத்தில்  திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே, முதல்வர் அவர்களை கேலிச்சித்திரமாக வரைந்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட திமுக ஐடி விங்க் நிர்வாகி ஒருவர் கட்சியிலிருந்து தூக்கியடித்தனர். அந்த நபரும்  விஜய் ஆதரவாளர்தான்.

இன்னொரு சர்ச்சையும் ஓடிட்டு இருக்கு. தருமபுரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பாமகவில் இருந்து வந்தவர். அவரது வீட்டு சுவற்றில் அதிமுக பாமக சின்னங்கள் வரையப்பட்டது இன்றும் காட்சியளிக்கிறது. சமீபத்தில் அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி உடன் அவர் சந்தித்து  ஆலோசனை நடத்திய புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இவர்களை  போலதான் அந்த விஜய் கட்சி நிர்வாகி  “அதிமுகவில் இருந்து விஜய் கட்சிக்கு தாவியவர்கள்”  கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்க்கு ஆதரவாக அதிமுக பேசி வருவதால் அந்த பாசத்தில், பழனிச்சாமியை வரவேற்றிருக்கிறார்கள்.   இதுபோன்றதொரு  அரசியல் கட்சியினரை தர்மபுரியில்தான் பார்ப்பீர்கள். திமுக தோல்விக்கு இது போன்ற  நயவஞ்சகர்களும்   ஒரு காரணம்”  என்றார்.

 

—    மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.