அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கடலில் எதிரொலித்த ’பெண் குரல்’ போன்ற மர்ம ஒலி!

திருச்சியில் அடகு நகையை விற்க

பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் எதிரொலித்த ஒரு விசித்திரமான மர்ம ஒலி அனைத்து விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு ஒலித்த இந்த மர்மமான ஒலி விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்தான் (NOAA) முதன் முதலில் இந்த ஒலியைப் பதிவு செய்திருந்தது. இது ஒரு பெண்ணின் குரலைபோல் ஒலிப்பதாக சிலர் விவரித்தனர். ஆனால் இந்த ஒலியின் அர்த்தம் குறித்த சரியான காரணங்கள் இன்று வரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் மர்ம ஒலி
பெண் மர்ம ஒலி

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

’ஜூலியா’ என்று பெயரிடப்பட்ட இந்த ஒலி சுமார் மூன்று நிமிடங்கள் நீடித்திருக்கிறது. இது 3000 மைல்களுக்கு அப்பால் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒலி ஒரு பெண் முணுமுணுப்பதைப் போல் இருப்பதாக சிலர் கூறியிருக்கின்றனர். ஆனால் 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன் சரியான தோற்றம் அல்லது காரணம் பற்றித் தெளிவான விளக்கங்கள் இல்லை.

பெண் மர்ம ஒலிNOAA விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த ஒலி மார்ச் 1, 1999 அன்று கிழக்கு பசிபிக் பகுதியில் உள்ள தானியங்கி ஹைட்ரோபோன் அமைப்புகள் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜூலியா என்று அழைக்கப்பட்ட இந்த ஒலி அண்டார்டிகாவில் தரையில் தங்கிய ஒரு பெரிய பாறை மூலம் வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இந்த ஒலி குறித்த சரியான காரணங்கள் இல்லாததால் பலரும் பல்வேறு விதமான கோட்பாடுகளை இதற்கு முன்வைக்கின்றனர். சிலர் இந்த ஒலி நீருக்கடியில் பயணிக்கும் வேற்றுக்கிரக கப்பலால் உருவானது என்று கூறுகின்றனர். ஜூலியா ஒலி இயற்கையான நிகழ்வாகக் கூட இருக்கலாம் என்று ஒரு பக்கம் விஞ்ஞானிகள் கூறிவந்தாலும், இந்த ஒலிக்கான சரியான காரணம் வெளிப்படாததால் இன்றும் அது மர்மமாகவே உள்ளது.

 

https://www.livyashree.com/

—    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.