அங்குசம் சேனலில் இணைய

அவலநிலை மாற ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் ?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

செப்டம்பர் 5,  கப்பலோட்டியதின் மூலம் அன்னிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வர்க்கப் போர் தொடுத்து, அதன் விளைவாக தேசத் துரோக வழக்கைச் சந்தித்து, சிறையில் செக்கிழுக்க வைக்கப்பட்ட தமிழ்ச் செம்மல் வ. உ. சிதம்பரனார் பிறந்த நாள்.

இன்று – செப்டம்பர் 5, ஆசிரியராகப் பணியைத் தொடங்கி குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள். ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.‌

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வ. உ. சிதம்பரனார்
வ. உ. சிதம்பரனார்

இந்த ஆண்டு, 2025 செப்டம்பர் 5, வஞ்சித்து கொல்லப்பட்ட மாகாபலி மீண்டும் தன் மக்களை பார்க்க வரும் நாளாக மலையாளம் பேசும் மக்கள் கொண்டாடும் ஓணம் – மலையாள வருடப் பிறப்பு – இன்றைய நாளில் அமைந்துள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மகாபலி முதல் வ. உ. சி. வரை தன் மக்களுக்கான உரிமைக்காக, கண்ணியமிக்க வாழ்க்கைக்காக போராடி தங்களின் உடைமைகளையும் உயிரையும் தியாகம் செய்ய துணிந்தவர்களின் போராட்டமே நமக்கு கிடைத்திருக்கும் அரசியல் விடுதலை.

அரசியல் விடுதலையைத் தொடர்ந்து சமூக, பொருளாதார விடுதலைக்கான வீரியமிக்க போராட்டம் நடத்த தவறியதின் விளைவே, இன்று நாம் சாதியாக கூறுபோடப்பட்டு, ஏழ்மை நிலையில் இருந்து மீள முடியாத பெரும் துயரத்தில் இருக்கும் அவல நிலை.

தூய்மைப் பணியாளர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரை அத்துக் கூலிகளாக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் வேதனை மிக்க சூழலில் இந்தியா உள்ளது.

கல்வியியல் பட்டயம் அல்லது பட்டம் பெற்று அரசின் பள்ளிக் கல்வித் துறையால் அல்லது பல்கலைக்கழகத்தால் ஆசிரியராக பணியாற்றும் தகுதி உள்ளது என்று சான்றளிக்கப்பட்டு, ஆசிரியர் பணியில் இருப்பவர்களை பார்த்து, “நீ  தகுதித் தேர்வு எழுது, முடியாவிட்டால் விருப்ப ஓய்வில் சென்றுவிடு” என்று ஆணையிடும் இழி நிலையில் ஆசிரியர்கள்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் வேலை  இழக்கும் அபாயம்!ஒரு பக்கம் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு “இனி பணியைத் தொடர இயலுமா?” என்ற அச்சம், இன்னொரு புறம் “நாங்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், எங்களுக்கு பணி வழங்குங்கள் என்ற போராட்டம், மற்றோரு புறம், நாங்கள் தகுதித் தேர்வு, வேலைக்கான போட்டித் தேர்வு ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்று வேலைக்கான உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்ற ஏக்கக் குரல். இதையும் கடந்து கணினி, உடற்பயிற்சி, தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தும் எங்களை ஏன் பணியில் அமர்த்தவில்லை என்ற போர்க் குரல். தனியார் பள்ளிகளில் எந்த பணிப் பாதுகாப்பும் இல்லாமல் அல்லல் படும் ஆசிரியர்கள்.

ஒருவரின் சோகம் மற்றொருவருக்கு வாய்ப்பு என்று கருதும் அளவிற்கு மனிதத் தன்மை இழந்து, நுகர்வு தன்மைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மனித பக்குவத்துடன் நமது சிக்கலை அணுகினால் துப்புரவுப் பணி செய்யும் தொழிலாளர்களும், விவசாயக் கூலிகளும் ஆசிரியரும் ஒரே வர்க்கம். தொழிலாளர் வர்க்கம் என்று உணர்வோம்.

டாக்டா் ராதாகிருஷ்ணன்
டாக்டா் ராதாகிருஷ்ணன்

இன்று (செப்டம்பர் 5, 2025) மகாத்மா ஜோதிபா, அன்னை சாவித்திரிபா, அன்னை பாத்திமா அவர்கள் வழியில் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராசர் போன்ற பெருமக்கள் நடத்திய கல்வி உரிமைக்கானப் போராட்டத்தை நினைவு கூர்ந்து,  தொழிலாளர் வர்க்கமாக நாம் அணிதிரண்டு, நமது அடுத்தத் தலைமுறைக்கான கல்வி உரிமையை வென்றெடுக்க களம் காண உறுதி எடுக்கும் நாளாக இன்றைய நாளை அமைத்துக் கொள்வோம்.

ஆசிரியர் தொழிலை மேற்கொண்டுள்ள நாம் இனி  இழப்பதற்கு ஒன்றுமில்லை.  மனிதர்களாகிய நமக்குள் இனி எந்த பாகுபாடும் இல்லை என்ற உறுதியுடன், தொழிலாளர் வர்க்கமாக நாம் அணிதிரண்டால், நமது உரிமைகளை நாம் வென்றெடுக்கலாம் என்ற உணர்வுடன் எழுச்சி கொள்வோம்.

காசவில் கதறும் குழந்தைகள், அந்த மாணவச் செல்வங்களின் ஆசிரியர்கள் கொல்லப்பட்டு எதிர்காலம் என்ன என்று தெரியாமல் தவிக்கும் இன்றைய உலகச் சூழலில், அந்த குழந்தைகளின் கல்வி உரிமைக்காக, அந்த‌ ஆசிரியர்களின் உரிமைக்காக குரலெப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

இனிய நாளில் இனியவை மட்டுமே பேசும் அளவில் எனது மனம் இன்னும் நுகர்வுத் தன்மையை அடையவில்லை. கண்ணியமிக்க மனிதனாக, சக கண்ணியமிக்க மனிதர்களுக்கு வரலாற்றுப் பார்வையுடன் அறிவியல் பூர்வமான தீர்வை முன்வைப்பதே ஆசிரியர் தினத்தில் மேற்கொள்ள வேண்டிய பணியெனக் கருதுகிறேன்.

பகத் சிங் முதல் வ. உ. சி. வரை சிந்தப்பட்ட இரத்தம் வீண் போகாது.  நமது உரிமைகளைக் காத்துக் கொள்ள நாம்  தொழிலாளர் வர்க்கமாக ஒன்றிணைவோம் என்பதே இன்றைய‌ ஆசிரியர் தின முழக்கம் என்பதாக பொதுப் பள்ளிக்களுக்கான மாநில மேடை, பொது செயலாளா் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு  தொிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.