மனித உடலில் தனிமங்கள் ! வாழ்க்கை வாழ்வதற்கே -பாகம் – 06
மனிதம் என்பது ஒரு புனிதம். அந்த புனிதத்தில் வேதியியலின் தனிமங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
மனித உடலில் உள்ள 99% தனிமங்கள் 6 முக்கிய தனிமங்களால் ஆனது. அவை ஆக்சிஜன் 65% கார்பன் 18% ஹைட்ரஜன் 10% நைட்ரஜன் 3% கால்சியம் 1.5% பாஸ்பரஸ் 1% இவை மனித உடலில் செல்கள் மற்ற ஊட்டச் சத்துக்கள் உருவாக்கவும் உயிரியல் செயல்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனித உடலில் மிக சிறிய அளவில் இருந்தாலும் நிதானமாக மிக முக்கிய வேலை செய்யும் தனிமங்கள் அவை.
பொட்டாசியம் (K), சோடியம் (Na), குளோரின் (Cl), மெக்னீசியம் (Mg), இரும்பு (Fe), தாமிரம் (Cu), செலினியம் (Se), கோபால்ட் (Co), மாங்கனிஸ் (Mn), குரோமியம் (Cr) இவை உடல் இயங்கும் மெட்டபாலிசம், ஹார்மோன்கள் சீரமைப்பு, எரிச்சல் செயல்கள் மற்றும் நோய்களுடன் போராட உதவுகின்றன.
மனிதத்தை புனிதமாய் தனிமத்தைக் கொண்டு காப்பாற்றுவோம். எந்த தனிமம் குறைபாடு இருக்குமானால், அந்தக் குறையை நீக்க இயற்கையோடு இயற்கை உணவு எடுத்துக் கொள்வோம்.
(தொடரும்)
பேரா. சா. அருள்
Comments are closed, but trackbacks and pingbacks are open.