நிலநடுக்கத்திலிருந்து குட்டிகளைக் காப்பாற்றிய யானைக் கூட்டம் !
நிலநடுக்கத்திலிருந்து குட்டிகளைக் காப்பாற்றிய யானைக் கூட்டம் !
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. சான்டியாகோ உயிரியல் பூங்காவின் சபாரி பூங்காவில் யானைக் கூட்டம் தங்கள் குட்டிகளைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து நிற்பதைப் பதிவு செய்துள்ள உயிரியல் பூங்கா விளக்கமளிக்கையில், இந்த நடவடிக்கை “எச்சரிக்கை வளையம்” என்று அழைக்கப்படுவதாகவும், இது குட்டிகளையும் கூட்டத்தையும் சாத்தியமான ஆபத்திலிருந்து பாதுகாக்கும் இயற்கையான நடத்தை என்றும் தெரிவித்தது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.