6 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் கும்பலை விரட்டி பிடித்த போலீசாரை பாராட்டிய எஸ்.பி!
திருச்சிராப்பள்ளி மாவட்டம். திருவரம்பூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பாரத மிகு மின் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 10.04.2025-ம் தேதி உதவி காவல் கண்காணிப்பாளர், திருவரம்பூர் அவர்களின் தனிப்படையினர் கைலாசபுரம். டவுன்சீப் குடியிருப்பு பகுதியில் குடியிருந்து வரும் நரேஷ் ராஜ் 26/25 த.பெ ஸ்ரீதரன் என்பவர் தடை செய்யப்பட்ட கஞ்சா 2.600 கி.கி வைத்திருந்ததாக கைது செய்தனர். அவரிடமிருந்து 2.600 கி.கி கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பாரத மிகுமின் நிலையத்தில் வழக்கு எண் 17/25 U/s 8(c) r/w 20(b), (ii), (B), NDPS Act-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
அதேபோல் 13.04.2025-ம் தேதி காலை 09. 00 மணியளவில் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய தொழில்நுட்ப கல்லூரி (NIT) அருகில் திரு.நாகராஜ், காவல் உதவி ஆய்வாளர், துவாக்குடி மற்றும் இரண்டு காவலர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு TN 81 H 8563 என்ற பதிவு எண் கொண்ட Honda Due சிகப்பு நிற இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயற்சித்தவர்களை வளைத்து பிடித்து விசாரிக்க முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியும் தாங்கள் 4 கிலோ கஞ்சா தூள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த்தாக ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் 1.சதீஸ்குமார் 29/25 த.பெ நல்லுசாமி, வாசன்நகர், இரட்டைவாய்க்கால், திருச்சி 2.முகமது இசாக் 28/25 த.பெ சிராஜீதீன், தென்னூர், திருச்சி மாநகரம் ஆகியோர்களை நிலையம் அழைத்து சென்று அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா தூள். இரு சக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டு துவாக்குடி காவல் நிலைய குற்ற எண் .168/25 U/s 8(c) r/w 20(b), (ii), (B), NDPS Act-ன் படி செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டுள்ளனர்.
மேற்கண்ட சிறப்பான பணியினை மேற்கொண்ட காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரெத்தினம், இ.கா.ப., அவர்கள் இன்று (14.04.2025) மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பண வெகுமதி வழங்கியுள்ளார்கள்.
மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை, போலி மதுபான விற்பனை, கள் விற்பனை, போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100 (வாட்ஸ்அப்) மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0431-2333621 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், சரியான தகவல் கொடுப்போருக்கு மாவட்ட காவல் அலுவலகம் வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பாராட்டி “பாராட்டு சான்றிதழ்” வழங்கப்படும் எனவும், தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.