நள்ளிரவில் கொண்டு வந்த வக்ஃபு சட்டத்திருத்தம் ! உ.பி. புல்டோசர் ஆட்சி ! திருவாரூரில் தெறிக்கவிட்ட கனிமொழி எம்.பி. !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்ஃபு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்த பாஜக அரசைக் கண்டித்து ஏப்ரல் 13 அன்று  திருவாரூர் தெற்கு வீதியில் “நமது வக்ஃப், நமது உரிமை” என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கண்டன கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி, விடிந்துவிட்டது ஆனால் எல்லோருக்கும் என்றும் விடியவில்லை என்று பொருள்பட கூடிய வகையில் மௌலானா S. ஃபக்ருத்தீன் பாகவி பேசினார். நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டிலே உதய சூரியன் உதித்து விட்டது,  இனிமேல் அதற்கு அஸ்தமனம் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உதயசூரியன் இருக்கும் வரை, தமிழ்நாட்டில் இருக்கும் கடைக்கோடி மனிதர்களுடைய உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

கனிமொழிநான் இந்த பொதுக்கூட்டத்திற்கு வரும் வழியில் கமலாலயத்தை தாண்டி வந்தேன். அந்த கமலாலயத்தில் கூட ஒரு தாமரைப்பூ இல்லை. அதனால், தமிழ்நாட்டில் எந்த ஆபத்தும் கிடையாது, எந்த தாமரையும் இங்கு மலராது. கடலில் தாமரை மலரும் என்று தூத்துக்குடியில்  போராட்டம் நடத்தினார்கள். இங்கு கமலாலயத்தில் மலரவதற்கே வழி இல்லை, வேற எங்கு தாமரை மலரும் என்று எனக்கு தெரியவில்லை.

இந்த கண்டன பொதுக்கூட்டம், இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்காக அவர்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்காக நாம் நடத்திக் கொண்டிருக்கும் கூடிய கூட்டம் இல்லை. இந்த நாட்டின் இறையாண்மையும்  மதநல்லிணக்கத்தையும் அரசியல் சாசன சட்டத்தையும், இந்த மண்ணின் உரிமைகளை பாதுகாப்பதற்காக, இந்த கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை இங்கே கூடியிருக்கக்கூடிய  ஒவ்வொரு மனிதனும் சகோதரியும் சகோதரனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

வக்ஃபு சட்டம்  நம்மைப் பாதிக்கவில்லை, நமக்கு எதிரான சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை என்று அமைதியாக இதை பார்த்துக் கொண்டிருந்தோம் என்றால், ஹிட்லர் காலத்திலேயே ஒரு கவிதையை சொல்வார்கள். நான் யூதன் இல்லை என்பதற்காக நான் கவலைப் படாமல் இருந்துவிட்டான். நான் சோசலிஸ்ட் என்பதற்காக நான் கவலைப் படாமல் இருந்துவிட்டான். கடைசியில் என்னை தேடி வந்த போது எனக்காக பேச யாருமில்லை என்ற சோகத்தோடு முடியக்கூடிய அந்த கவிதையை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், பாஜகவிற்கு மதம் என்பது மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியைப் பிடிப்பதற்கு ஆயுதமே தவிர அவர்களுக்கு இந்துக்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும், யார் மீதும் அக்கறை கிடையாது. மக்கள் மீது அக்கறையற்ற ஒரு அரசுதான் டெல்லியில் ஆட்சி செய்கின்ற பாஜக என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் என்று இந்த மண்ணிலே அடித்தட்டில் இருக்கக்கூடிய அத்தனை மனிதர்களையும் நசுக்கக்கூடிய ஒரு ஆட்சி நடைபெறுகிறது. தற்போது, இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் எதிரான ஒரு சட்டத்தை கொண்டு வருகிறது.

பாஜகவின் அமைச்சரவையில், ஒரே ஒரு மைனாரிட்டி அமைச்சர் தான் இருக்கிறார், அவரும் இஸ்லாமியர்  இல்லை. பாஜகவில் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட கிடையாது. ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை வக்ஃபு சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிய பயன்படுத்துகிறார்கள். பாஜகவிடம் நாம் படிக்க வேண்டிய பாடம் என்னவென்றால், மிகப்பெரிய பொய்யை, ஒரு பொய்யான உலகத்தை கட்டமைப்பார்கள்.

இஸ்லாமியர்களின் பாராளுமன்றத்தை வக்ஃபு  இடம் என்று சொல்லி எடுத்துக் கொள்வார்கள். இஸ்லாமியர்கள் எதை வேண்டும் என்றாலும், எங்களுடைய நிலம் என்று சொல்லி எடுத்துக் கொள்ள முடியும். வக்ஃபு சொத்துக்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் ரூபாய் 8 லட்சம் கோடியாக இருந்தது, இன்று ரூபாய் 12 லட்சம் கோடியாக வளர்ந்தது விட்டது. இப்படியே விட்டுவிட்டு நான் பார்த்துக் கொண்டிருந்தோம் என்றால் இந்த நாட்டிலே இந்துக்களுடைய நிலை என்னவாகும். இந்த நாட்டில், ரயில்வே அடுத்த படியாக அதிகமாக சொத்துகள் வைத்திருப்பது வக்ஃபு தான் என்று புனை கதைகளை சொல்கிறார்கள்.

கனிமொழிஅதைத்தாண்டி, மிகச் சிறப்பான கதையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் சொல்கிறார். திருச்சி அருகே உள்ள திருச்செந்துறை என்ற ஒரு ஊரில், ஒரு கோயில் இருக்கக்கூடிய அந்த கிராமம், ஒரே நாளிலே அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு சொந்தமான சொத்துக்களை வக்ஃபு எடுத்துக்கொண்டதாக சொல்கிறார். உண்மை என்னவென்றால், டிஜிட்டிஸ் (Digitize)  செய்யும் போது ஒரு சின்னத் தவறு நேர்ந்து விடுகிறது. அதை உடனடியாக கண்டுபிடித்து, அடுத்த கணமே மறுபடியும் சரி செய்யப்படுகிறது, இவ்வளவுதான் நடந்தது.

ஆனால், அதற்கு பின்னால் பாஜகவின் கட்டமைப்பு இருக்கக் கூடிய மிகப் பெரிய கதை என்னன்னா, வக்ஃபு  நினைச்சா ஒரு ஊரே என்னோடது என்று சொல்ல முடியும். உண்மை என்னவென்றால், அரசாங்கம்தான் தொடர்ந்து வக்ஃபு போர்டுயை நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது. அதைவிட அழகான ஒரு கதையை சொல்கிறார்கள். நாங்கள்தான் இப்பொழுது பெண்களுக்கு அதனுள்ளே வரக்கூடிய உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம் என்று, தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் அமைந்திருக்கக் கூடிய அந்த நிர்வாகத்தில் இரண்டு பெண்கள்,என்னுடைய நெருங்கிய தோழி பாத்திமா முசாபர் அவர்கள் இன்னைக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எத்தனையோ புனைகதைகள் ஒன்றிய அமைச்சர்கள் சொல்கிறார்கள்.

என்னுடைய அடிப்படை உரிமை என்பது என்னுடைய சொத்துக்களை யாருக்கும் எழுதிய வைக்க முடியும், இதை அரசாங்கம் எப்படி கேள்வி கேட்க முடியும்? இந்த வக்ஃபு சட்ட திருத்தத்தால் 12 ஆண்டுகள் ஒருவர் அந்த நிலத்தில குடியிருந்தால் அவர்களுக்கு அந்த நிலம் சொந்தம் என்று சொல்லிவிட முடியும். இது எந்த விதத்தில் நியாயம்? மத நம்பிக்கை இல்லாத ஒருவர், கோவிலை நிர்வாங்கம் செய்வது நியாம் இல்லை என்று நினைப்பது தான் நியாயம்.

கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு கல்லூரி கட்டி, அந்த கல்லூரியில் கல்வியை கற்பிக்க வரக்கூடிய  ஆசிரியர்கள். அதில், இஸ்லாமியரும் கிறிஸ்துவர்களுக்கு ஆசிரியர் வேலை கொடுத்தால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சங்கீ கூட்டம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அப்படி இருக்கக் கூடிய ஒரு நிலையில், வக்ஃபு நிர்வாகத்தில் எதற்காக இஸ்லாமியர்கள் இல்லாதவர்களை கொண்டுவந்த சேர்க்கப்படுகிறார்கள்.

வக்ஃபு நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்ட சொத்து அடிப்படையில் வேற எதுக்கு மாற்றவே முடியாது. ஒரு அரசு நினைத்தால் ஒரு இடத்தை தனக்கு வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த வக்ஃபு சட்டத்தின் வழியாக அரசாங்கத்தால் அவர்களின் சொத்துக்களை எடுத்துக்கொள்ள  முடியும் என்ற நிலை கொண்டு வந்துஇருக்கிறார்கள்.

ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சொல்கிறார், இஸ்லாமியர்கள் இவ்வளவு சொத்து வச்சிருக்காங்க, ஆனால், இன்றும் இஸ்லாமியர்களை ஏழைகளாக, நிறைய பேர் படித்தவர்களாக, வேலை இல்லாதவர்களாக, வீடு இல்லாதவர்களாக  அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார்? நீங்கள் ஏழ்மையில் உள்ள இஸ்லாமியர்களுக்கு வக்ஃபு சொத்துக்கள் கிடைக்க வேண்டுமா என்று நினைப்பீர்கள்? உங்களுக்கு தெரிந்த ரெண்டே ரெண்டு பேர்தான் இந்தியாவில் இருக்கிறார்கள். அந்த இரண்டு கார்பொரேட் (Corporate) நிறுவனங்களுக்கு ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக எழுதி வைப்பதற்காக நீங்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்து, அதன் வழியாக இஸ்லாமிய சொத்துக்களை பிடுங்க நினைக்கிறீர்கள்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

நீங்கள் மக்களை பற்றி கவலை படுகிறார்கள் என்றால், எதற்காக இஸ்லாமிய பிள்ளைகளுக்கு தந்துகொண்டு இருந்த கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) நிறுத்திவிட்டர்கள். ஒன்றிய பாஜக அரசு நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு வீடு இல்லை என்று ஒருபுறம் சொல்லிவிட்டு ஆனால் மறுபுறம் உத்தரபிரதேசத்தில் என்ன நடக்குது. பாஜக ஆட்சி செய்கிராக உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள்  வாழ்த்து கொண்டு இருக்கின்ற இடத்தில், புல் டொஸ்சேர் (Bull Dozer) கொண்டு வந்து வீடுகளை இடித்து  நொறுக்குகிறார்கள்.  இடிபாடுகளுக்கு இடையே இடிந்து விழுந்து கொண்டிருக்க கூடிய வீட்டுக்குள் ஓடிப்போய் தன்னுடைய புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி வருகிறாள் ஒரு சிறுமி. இதை விட, வெட்கக்கேடான விசியம் எந்த நாட்டிலும் நடக்காது.

திருவாரூரில் தெறிக்கவிட்ட கனிமொழி எம்.பி. !ஒரு குழந்தை, தன்னுடைய புத்தங்களை காப்பதற்காக  இடிந்து விழுந்து கொண்டிருக்க கூடிய ஒரு வீட்டுக்குள் ஓடிப்போய் அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறாள். ஆனால், நீங்கள் நாடாளுமன்றத்தில் பேசுகிறீர்கள், இஸ்லாமியர்கள் இன்னும் அதிகமாக கல்வி பெறவும், படிப்பதற்கும் வழியில்லை. அதனாலதான், இங்க சட்டத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.

இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இடையே ஒரு வெறுப்பு அரசியலை தொடர்ந்து விதைத்து கொண்டிருக்கக்கூடிய பாஜக ஆட்சி. இந்த நாட்டை துண்டாட கூடிய ஒரு ஆட்சி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பேரறிஞர் அண்ணா ஒருமுறை நாடாளுமன்றத்திலே பேசும்பொழுது அழகான சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார். U born unity or uniformity? unityக்கும், uniformityக்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஒற்றுமை வேண்டும் என்றால் எல்லோரையும் மரியாதையாக நடத்த வேண்டும். ஒருமைப்பாடு வேண்டும் என்றால் எல்லோருக்குமான இடத்தையும் அளிக்க வேண்டும். எல்லோருக்கும் அவர்களுடைய பண்பாடு, கலாச்சாரம், மொழி, மரியாதை தர வேண்டும். அது தான் ஒற்றுமையை உருவாக்கும்.

இன்று பாஜக உருவாக்க நினைப்பது,  ஒற்றை ஆட்சி முறை. எந்த மதமும் இருக்கக்கூடாது,  ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மண்ணிற்கும் இருக்கக்கூடிய வித்தியாசமான வேறுபட்டு இருக்கக்கூடிய அந்த மத வழிபாட்டு முறைகள் இல்லை. அவர்கள் நினைத்து திணிக்கக் கூடிய மதம், அவர்கள் நினைத்து திணிக்கக் கூடிய மொழி.

ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே சிந்தனை, ஒரே அரசியல், ஒரே கோட்பாடு கொண்டு வந்து இந்த நாட்டின் ஒற்றுமையை குலைக்க பாஜக துடிக்கிறார்கள். அதை உருவாக்கி விட்டால், தன்னை அசைப்பதற்கு வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய மாநிலங்களில் நடக்கக்கூடிய தேர்தல்களில், தன்னுடைய ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் விதிமுறைகளை மாற்றி, வாக்களித்த மக்கள் தாங்கள் இவர்களை தான் தேர்ந்தெடுத்தோமா  இல்லையா? என்று நினைக்க கூடிய அளவிற்கு தேர்தலை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இதையெல்லாம், இந்த நாட்டு மக்கள் வெகுகாலம் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால், தமிழ்நாட்டில் இருந்து இந்த புரட்சி கிளம்புகிறது வெடித்திருக்கிறது. வக்ஃபு சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மிகவும் அவசரமாக, இரவு இரண்டரை மணி வரை முழித்துக்கொண்டு, ஒரு சட்டத்தை கொண்டு வந்த பாஜகக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் குரலை ஆணித்தரமாக எழுப்பி இருக்கிறார். தமிழ்நாடு இந்த சட்டத்தை என்றும் ஏற்றுக் கொள்ளாது, இது ஒரு கருப்பு தினம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து எழுந்த இந்த எழுச்சி இன்று நாடு முழுவதும் நிச்சயமாக பரவும். இது வெறும் உச்சநீதிமன்றத்தில் மட்டுமே நியாயமும் கேட்டுக்கொண்டது இருக்கக்கூடிய கூட குரலாக இருக்காது என்பதை பாஜக உணர்ந்து கொள்ள வேண்டும். இது மக்களின் குரலாக, மக்களின் புரட்சியாக, மக்கள் மௌனமாக சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். டெல்லியை மாற்றக்கூடிய புரட்சியாக இது நிச்சயமாக மாறும் என்பதை பாஜகவின் கவனத்திற்கு எடுத்துக் சொல்கிறேன்.

இந்தக் குரல் இந்த திருவாரூரின் வீதியிலே எழுந்த குரல் தான், தமிழ்நாட்டில் இருந்து எழுந்த குரல் தான் இந்தியாவை மாற்றி அமைத்த நம் தலைவர் கலைஞர் அவர்களின் குரல். இங்கேயே எழுந்த கண்டன குரல் டெல்லியை மாற்றி அமைக்கும் என்று பேசினார்.

 

—  மணிபாரதி.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.