அங்குசம் சேனலில் இணைய

திருச்சி எல்ஃபின் ELFIN நிறுவன மோசடி ஏஜெண்ட் கைது ! ஏமாந்தவர்கள் புகார் அளிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு !

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி எல்ஃபின் ELFIN நிறுவன மோசடி மேலும் ஒரு ஏஜெண்ட் கைது ! ஏமாந்தவர்கள் புகார் அளிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு !

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்டு பல இடங்களில் கிளை பரப்பி இயங்கி வந்த ELFIN E.Com Pvt Ltd என்ற நிறுவனம்; பொதுமக்களிடமிருந்து 400 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துவிட்டு பணத்தை திருப்பித்தரவில்லை என்ற புகாரில் சிக்கியது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மேலும், Sparrow Global Trade Trichy என்பது போன்று புதிய புதிய பெயர்களில் கம்பெனிகளை துவங்கியும், இடத்திற்கும் ஏமாறக் காத்திருக்கும் ஆளுக்கும் தகுந்தாற்போல, விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்வதாகவும்; பணத்துக்கு நிலம் தருவதாகவும்; பத்தே மாதத்தில் போட்ட பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும் கூறி மோசடியான முறையில் பல கோடிகளை வாரிச் சுருட்டியிருந்தது மேற்படி கம்பெனி.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த நிறுவனம் என்பதால், திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தொட்டியம் சந்திரசேகரன்
தொட்டியம் சந்திரசேகரன்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இந்த வழக்கில் இதுவரை சுமார் பத்தாயிரம் புகார்கள் வரப்பெற்றிருப்பதாகவும் சுமார் 500 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாகவும் இதுவரை சுமார் முப்பதுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள். எல்பின் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் எல்பின் ராஜாவுக்கு எதிராக மட்டுமே 15-க்கும் அதிகமான வழக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஒரு ஊரில் ஒரு நிறுவனம் வழக்கில் சிக்கினால், அடுத்த ஊரில் வேறு ஒரு பெயரில் நிறுவனம் தொடங்கி அல்லது மொபைலில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி அதன்வழியே இன்று வரையிலும் தனது மோசடியை தொடர்ந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய நீண்டநாள் தலைமறைவு குற்றவாளியாக இருந்து வந்த இந்நிறுவனத்தின் முக்கியமான ஏஜெண்டுகளுள் ஒருவனான, தொட்டியத்தை சேர்ந்த சந்திரசேகரனை டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் மற்றும் உதவி ஆய்வாளர் கு.மகாலெட்சுமி தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.

மேற்படி, ELFIN E.Com Pvt Ltd மற்றும் Sparrow Global Trade Trichy ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்து இதுவரை புகார் அளிக்காதவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக, திருச்சி மன்னார்புரத்தில் இயங்கிவரும் திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளிக்கலாம் என்பதாக போலீசார் தரப்பில் வெளியான அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

1 Comment
  1. நாசர் says

    கைது செய்வது ஓகே. ஜாமினில் உடனே வெளியில் வந்து விடுகிறார்கள். பணம் பாதாளம் வரை பாய்கிறது

Leave A Reply

Your email address will not be published.