‘எமகாதகி’ யின் ஹிட் கொண்டாட்டம்! கேக் வெட்டிய பெண் பத்திரிகையாளர்கள்!
நைசாத் மீடியா ஒர்க்ஸ் பேனரில் ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், டைரக்டர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலனின் நல்ல கதை , மிக அருமையான திரைக்கதையுடன் இந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த படம் ‘எமகாதகி’. வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது. தியேட்டர்களின் எண்ணிக்கை யும் கூடியுள்ளது. இதனால் பெரிதும் மகிழ்ந்த தயாரிப்பாளரும் படக்குழுவினரும் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் பேசிய சிலரின் பேச்சு….
தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசராவ் ஜலகம்
“இப்படத்திற்கு பெரும் ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் 20 வருடங்களாகத் தமிழ் நாட்டில் வேலை பார்த்து வருகிறேன். இது கலாச்சாரத்தைப் போற்றும் நிலம். இந்த தமிழ் நாட்டிற்கு ஏதாவது பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இந்தக்கதையைச் சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தை இணைந்து தயாரித்த கணபதி ரெட்டிக்கு, இப்படத்திற்காக உழைத்திட்ட இயக்குநர் , நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பெப்பின் ஜார்ஜ் மிகத் திறமையானவர். இப்படத்தில் அவரது திறமையை நிரூபித்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அனைத்து ரசிகர்களும் எங்களது இப்படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் “.
ஒளிப்பதிவாளர்சுஜித் சாரங்
“பெப்பின் ஒரு நல்ல ரைட்டர். இப்போது மிகச்சிறந்த இயக்குநரும் ஆகிவிட்டார். இப்படம் மக்களிடம் மிக நல்ல வரவேற்பைப் பெற காரணமான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி”.
‘எமகாதகி’ ரூபா கொடுவாயூர்
“பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இப்படத்தை எங்கள் குழுவைத் தாண்டி முதல் முதலில் உங்களுக்குத் தான் காட்டினோம். நீங்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரியதாக இருந்தது. நீங்கள் தந்த ஆதரவு அனைத்துக்கும் மிக்க நன்றி. என் முதல் படம் இது, இப்படி ஒரு நல்ல திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் மிகக் கடினமான உழைப்பைத் தந்தனர். என்னுடன் நடித்த நடிகர்கள் அனைவரும் எனக்குப் பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள்”.
தயாரிப்பாளர் கணபதி ரெட்டி(தெலுங்கில் பேசினார்)
“எனக்குத் தமிழ் தெரியாது மன்னிக்கவும். பெப்பின் மிகத் திறமையானவர். இப்படத்தை மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். ராகுலுடன் இனி எல்லாப் படத்திலும் இணைந்து செயல்படுவேன். எங்கள் படத்திற்கு முழு ஆதரவைத் தந்த பத்திரிகை ஊடக நண்பர்கள், தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி”.
இயக்குநர் பெப்பின் ஜார்ஜ்
” எங்களுக்கு மிகவும் முக்கியமான படைப்பு இது . இப்படம் முழுமையாக வந்ததற்கு இம்மேடையில் இருப்பவர்கள் தான் காரணம். அதே போல் இப்படம் மக்களிடம் சென்று சேர்ந்ததற்குப் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் காரணம். உங்களுக்குத் திரையிட்டவுடனே இப்படத்தின் தலையெழுத்து மாறிவிட்டது. நீங்கள் தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி. நல்ல படங்களைத் தொடர்ந்து தருவேன்”.
தயாரிப்பாளர் ராகுல் வெங்கட்
“எங்கள் படத்தை மிகப்பெரிய படமாக மாற்றித் தந்த பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இந்தக் கதையை பெப்பின் சொல்லி 3 வருடம் ஆகிவிட்டது. இப்படம் உருவாக என் அம்மாவும் அப்பாவும் தந்த ஆதரவு மிக முக்கியம். அவர்களுக்கு சினிமா பிடிக்கும் என்பதால் எனக்கு ஆதரவு தந்தார்கள். எனக்குப் பணம் முக்கியமில்லை, பணத்துக்காக இப்படத்தைத் தயாரிக்கவில்லை.
இந்தப்படம் குழுவாக எங்களுக்கு முக்கியமான படம். எல்லோருமே மிக அர்ப்பணிப்புடன் உழைத்தனர். எங்களுக்கு நிறையப் பதட்டம் இருந்தது. ஆனால் இப்படத்தை நீங்கள் பார்த்த பிறகு தான் மிகப்பெரிய நிம்மதி வந்தது. நீங்கள் தந்த பாராட்டில் தான் மக்களிடம் இப்படம் சென்று சேர்ந்துள்ளது. திரையரங்குகள் அதிகரிக்கக் காரணம் நீங்கள் தான். இன்னும் இது போல் நிறைய நல்ல படங்கள் செய்வோம் ஆதரவு தாருங்கள்”
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படத்தில் நடித்த மற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப க் கலைஞர்கள் அனைவரும் பேசி முடித்ததும் பெண் பத்திரிகையாளர்கள் சிலரை மேடைக்கு அழைத்து 🍰 கேக் வெட்டச் செய்து கெளரவப் படுத்தினார் தயாரிப்பாளர்ராகுல் வெங்கட். ஹீரோயின் ருபா கொடுவாயூர் பெண் பத்திரிகையாளர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
— மதுரை மாறன்.