வீட்டை இடிக்க திட்டம் போடும் பேரூராட்சி தலைவர்! அரசியல் கால் புணர்ச்சியா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் வீடு கட்ட அனுமதி கொடுத்தவரே வீட்டை இடிக்காமல் விடமாட்டேன், துப்புரவு பணியாளர்களை வைத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் விடமாட்டேன் என பழனி செட்டிப்பட்டி சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி மிரட்டுவதாக  குற்றச்சாட்டு.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் ஒரு தெருவிற்கு மட்டும் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சாலை வசதிகள்  மேற்கொள்ளாததால் குண்டும் குழியுமாக தனித்தீவுப் போல் காட்சியளிக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சுகதேவ் தெருவில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருபவர் வினோத்,

இவர் முறையாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் கட்டிட அனுமதி  வாங்கி கடந்த 2022 ஆம் ஆண்டு வீடு கட்டியுள்ளார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மேலும் இந்த வீட்டிற்கு முறையாக குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, வீட்டு வரி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக கட்சிப் பணிகளை செய்து வந்த வினோத் திமுக கட்சியில் இணைந்து விட்டார்.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் அமமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து கொண்டார். மிதுன் சக்கரவர்த்தி மற்றும் வினோத் இருவருக்கும் இடையே அரசியல் கால் புணர்ச்சி ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மிதுன் சக்கரவர்த்தி,  வினோத் வசிக்கும் வீட்டிற்கு முறையாக அனுமதி பெறாமல் சில பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வினோத் வீட்டிற்கு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை அனுப்பி அடிக்கடி வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒட்ட உத்தரவிட்டு வருகிறார்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

மேலும் வினோத்தை பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்களை வைத்து மிரட்டி வருகிறார்.

மேலும் வீட்டை இடிக்காமல் இருக்க வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் செயல் அலுவலர் தொடர்ந்து மிரட்டுவதாக வினோத் குற்றம் சாட்டி வருகிறார்.

இது குறித்து வினோத் தாயார் கூறுகையில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வெற்றி பெற தீவிரமாக என் மகன் உழைத்ததாகவும் தற்போது அவர் கட்சி மாறியதால் அவரிடமிருந்து விலகி திமுகவில் இணைந்ததால், திமுகவில் இருந்து விலகி தன்னுடன் சேர வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி பல்வேறு இன்னல்கள் கொடுத்து வருவதாக கூறினார்.

பழனிசெட்டிப்பட்டியில் உள்ள 15 வார்டுகளில் தான் வசித்து வரும் தெருவை தவிர மற்ற அனைத்து தெருவிற்கும் சிமெண்ட் சாலை வசதிகள் போடப்பட்டுள்ளதாகவும் சுகதேவ் தெருவில் மட்டும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாலை வசதிகளை மேற்கொள்ளாமல் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அவசர தேவைக்கு கூட தெருவை கடந்து செல்வதில் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும், எங்கள் வீட்டிற்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பி உன் வீட்டை இடிக்காமல் விடமாட்டேன் என மிரட்டுவதாகவும் இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்ட பேரூராட்சி தலைவர் சொல்வதை போல் திமுகவில் இருந்து விலகி பேரூராட்சி சேர்மன் இருக்கும் காங்கிரஸ் கட்சியில்  சேர்ந்தால் தான் உங்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறியதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.

எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்க பழனிச்சட்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.

 

—  ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.