செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவா்களுக்கான சுற்று சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு !
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுற்று சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி சமூதாயக்கூடத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச தலைமையில் இணை முதல்வர் முனைவர் குமார் மாணாக்கர்கள் தாங்கள் விரிவாக்கத்துறையின் மூலம் செயல்படுத்தும் சுற்று சூழல் விழிப்புணர்வு செயல்பாடுகள் நிகழ் காலத்திற்கும் எதிர்கால சமூகத்திற்கும் பாதுகாப்பான வழிமுறையாக அமையும் என்று வழியுறுத்தினார்.
விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச தமது தொடக்கவுரையில் தற்பொழுது சமூகத்தில் நிலவும் இயற்கை பேரழிவுகளாளும் மனித அச்சுறுத்தல்களாளும் ஏற்படும் சீர்கேடுகளை மாணாக்கர்கள் மனதில் கொண்டு தமது சமூகப்பணியில் நீடித்த நிலைத்த சுற்றுச்சூழல் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று கூறினார்.
திருச்சிராப்பள்ளி பீஷப் ஹீபர் கல்லூரியின் தாவரவியல் துறை பேராசியிரியர் இம்மானுவேல் சகாயராஜ் இயற்கை மற்றும் செயற்கை பேரழிவுகளையும் குறிப்பாக காடுகளை அழித்தல் இரசாயண உரங்களை நெகிழிகளை பயன்படுத்துதல் மூலம் சுற்றுச்சூழல் அழிவுகளை சந்திக்க நேரிடுகிறது என்றும் தீர்வுக்காண வழி முறைகளான திடக்கழிவு மேலாண்மை சாண எரிவாயு இயற்கை உரங்களை பயன்படுத்துதல் பாரம்பரிய மரங்களையும் மூலிகைகளையும் வேளாண்மையும் பாதுகாப்பதன் மூலம் கிராம மற்றும் நகர சுற்றுச்சூழல் மேம்பாடு அடைய வழிவகுக்கும் என்று வலியுறுத்தினார்.
வாய்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் திட்ட இயக்குநர் திரு கிரகோரி சமூகத்தில் அனைவரும் சுற்றுச்சூழலிலும் பொருளாதாரத்திலும் குறிப்பாக கிராமங்களிலும் நகரங்களிலும் அவர்களின் வாழ்வியலில் உணவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்பட அனைவரும் இயற்கையோடு இணைந்து எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறினார் மேலும் சுற்றுச்சூழல் செயல்பாட்டினை வலியுறுத்தும் விதமாக மாணாக்களுக்கு துணிபைகளையும் விதைப்பந்துகளையும் வழங்கினார்.
விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயச்சந்திரன் உலகளாவிய நிலையான நீடித்த வளர்ச்சிக்கு பதினேழு இலக்குகளை சமூதாய பணிகளில் செயல்படுத்துவதன் மூலம் நாடு தன்னிறைவு பெறும் என்றும் இவையணைத்திற்கும் சுற்றுச்சூழல் மேம்பாடு அடித்தளமாக அமையும் என்று விளக்கி கூறினார்.
இளநிலை ஒருங்கிணைபாளர்; திரு ஜெயசீலன் அறிக்கை தயார் செய்யும் வழிமுறைகளையும் அதனை இணையதள வழியில் சமர்பிக்கும் முறைகளையும் எடுத்துக் கூறினார்.
முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு லெனின் வரவேற்றார் முடிவில் இளநிலை ஒருங்கிணைப்பாளர் திரு ஜோசப் கிறிஸ்து ராஜா நன்றி கூறினார் திரு சுதாகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் திரு ஜெயசீலன் மற்றும் திருமதி யசோதை செய்திருந்தார்கள் மேலும் தொழில் நுட்ப உதவிகளை உதவியாளர் திரு அமலேஸ்வரன் செய்திருந்தார்.
பணிமுறை ஒன்று மற்றும் இரண்டின் சுற்றுச் சூழல் குழுவின் மாணாக்கர்கள் 350 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பற்றிய கண்காட்சியும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூங்கில் ஆன பயன்பாட்டு பொருட்களும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்று இருந்தது குறிப்பிடதக்கது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.