அங்குசம் சேனலில் இணைய

ஒத்திவைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம் ! கலெக்டா் அறிவிப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அலிம்கோ நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்குஉதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்று சக்கர வண்டிகள், மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் மற்றும் நடைபழகு உபகரணம், காதுக்கு பின் அணியும் காதொலிகருவி, பிரெய்லி கை கடிகாரம், புறஉலக சிந்தனையற்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உபகரணங்கள், தொழுநோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான அன்றாட வாழ்வியல் உபகரணங்கள்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு திறன்பேசிகள், நவீன மடக்கு ஊன்றுகோல், மின்கலனால் இயங்கும் மூன்று சக்கர வண்டி மற்றும் சக்கர நாற்காலி, காலிப்பர் (உதவிஉபகரணம்), செயற்கை அவயங்கள் (செயற்கை கை,கால்), மூத்த குடிமக்களுக்கான ஊன்றுகோல் மற்றும் வாக்கர்,சிறப்பு சக்கர நாற்காலி ஆகிய உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம்கள் 21.06.2025, 28.06.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் மணப்பாறை, மருங்காபுரி மற்றும் வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் நடைபெற திட்டமிட்டு அதில் 21.06.2025 அன்று அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மணப்பாறையில் நடைபெற்றது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மீதமுள்ள 28.06.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி மற்றும் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, வையம்பட்டி ஆகிய இரு இடங்களில் நடைபெற இருந்த முகாம்கள் நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட முகாம்கள்நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.சரவணன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.