ஈ.டி & ஐ.டி அடுத்த இடி ஐசரிகணேஷுக்கு?
சினிமாத் தயாரிப்பில் இருக்கும் சில பா.ஜ.க. புள்ளிகளே “ஸ்கெட்ச்” போட்டுக் கொடுப்பார்கள். இப்படித் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு ரொம்ப நாட்களாக ‘ ஸ்கெட்ச்’ போட்டும் ஒன்றும் சிக்காததால், அமைச்சர் செந்தில் பாலாஜியை டோட்டல் டேமேஜாக்கி விட்டார்கள். சினிமா உலகில், இரண்டு மாதங்களுக்கு முன்பு லைக்கா கம்பெனியின் மீது கர்ண கொடூரமாக பாய்ந்து அலறவிட்டார்கள் இரண்டு டிபார்ட்மெண்ட் ஆட்களும்.
இப்போது அவர்களின் அடுத்த “இடி அட்டாக்“ வேல்ஸ் கல்லூரிகளின் அதிபர் ஐசரி கணேஷ் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். கல்லூரிக் கட்டணக் கொள்ளை மூலம் குவிந்ததை “வெள்ளை” யாக்க சினிமாவில் பல கோடிகளை இறக்குகிறார் ஐசரி கணேஷ். ஆறேழு மாதங்களுக்கு முன்பு பங்குச் சந்தையிலும் இறங்கி, அதன் மூலம் வரும் கோடிகளையும் சினிமாவிலும் இறக்கிய ஐசரி கணேஷ் இப்போது பெங்களூர் புறநகரில் சுமார் 300 கோடி எஸ்டி மேட்டில் ‘ஜாலிவுட் ஸ்டுடியோஸ் & அட்வென்சர்ஸ் [Jolly wood Studios & Adventures] என்று பெயரில் மெகா தீம்பார்க் ஒன்றை ஒப்பன் பண்ணிருக்கார்.
அதுவும் யாருடைய தலைமையில்னா, பா.ஜ.க.வின் நேரடி அரசியல் எதிரியான, கர்நாடக காங்கிரசின் தலைவரும் மாநில துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் தலைமையில். ஜசரி கணேஷ் தீவிர அ.தி.மு.க.காரர் பழனிசாமியின் பக்காவிசுவாசி என்றாலும் தொழிலுக்கு தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக இங்கே உதயநிதியை அப்பப்ப சந்திச்சு போட்டோ எடுத்துப்பார். சில அமைச்சர்களையும் ‘மீட் பண்ணுவார்.
இதற்காக வாரியத் தலைவர் ஒருவருக்கு சிறப்பு கவனிப்பு ‘ செய்வார் ஐசரி. இதே போல் தான் பெங்களூரில் பொழப்பு நடக்க காங்கிரஸ் துணை, முதல்வரை வைத்து ஜாலிவுட் ஸ்டுடியோவைத் திறந்திருக்கார் ஐசரி கணேஷ். சில மாதங்களுக்கு முன்பு, அதாவது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்புவரை, டி. கே. சிவக்குமாரையே திகிலடைய வைத்தது ஈடியும் ஐ.டி.யும்.