திருச்சி மாவட்டத்தில் நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2024-25ம் ஆண்டு சிறப்பு (சம்பா) பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்புஆண்டில்,திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை 91835 ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 15 ஆம் தேதிபயிர் காப்பீடு செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் 18938 ஏக்கர் பரப்பளவிற்குமட்டுமே விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.

மேலும் நடவுபணிகள் தாமதமாக ஆரம்பித்த காரணத்தினாலும், மழைபொழிவு தாமதமாக உள்ள காரணத்தினாலும், இன்னும் 15 நாட்களுக்குபயிர் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

நெல் பயிர் காப்பீடு
நெல் பயிர் காப்பீடு

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கான பயிர் காப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.566/-ஐ உடனடியாக பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். நடப்பு ரபி மற்றும் சிறப்பு பருவத்திற்கு ஷீமா (KSHEMA GIC) பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனவே சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதிவரை காத்திருக்காமல் நவம்பர் 30ஆம் தேதிக்கு முன்னதாகவே காப்பீடு செய்து இந்த நல்வாய்ப்பினை தவறாமல் பயனபடுத்தி கொள்ளுமாறு  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.