போலி ரசீது ! கிராவல் மண் கொள்ளை! நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
கடந்த 2020-2021 ஆண்டுகளில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் சிவாயம் பகுதிகளில் அரசு அனுமதியுடன் இயங்கி வந்த கிராவல் குவாரிகளின் அனுமதி சீட்டுகளை (Permit) போலியாக தயாரித்து கிராவல் மணலை விற்பனை செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக திருச்சி மாவட்டம், உறையூரைச் சேர்ந்த பாலகண்ணன் என்பவர் பதிவு தபால் மூலம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய புகார் மனுவைப் பெற்று கடந்த 08.10.2021 ஆம் தேதி கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய எதிரிகள் நிவேதன், வயது 28, த/பெ.ரகுபதி, பெரியார் நகர், குளித்தலை, கரூர் மற்றும் தர்மதுரை, த/பெ.கந்தசாமி, விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டுள்ளனர்.

இவ்வழக்கில் 27.12.2022 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும், 14.06.2023 ஆம் தேதி சசிகலா, மாண்புமிகு குளித்தலை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 அவர்களால் விசாரணைக்கு எடுக்கப்பட்டு இன்று 18.08.2025 ஆம் தேதி விசாரணை முடிக்கப்பட்டு எதிரிகள் 1.நிவேதன், 2.தர்மதுரை ஆகியோருக்கு போலி ஆவணம் தயாரித்த குற்றத்திற்காக தலா 03 ஆண்டுகள் சிறை தண்டனையும், மோசடி செய்த குற்றத்திற்காக தலா 02 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தும் மற்றும் தலா ரூ.1000/- அபராதம் விதித்தும், சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரிகளுக்கு 05 சிறை தண்டணை பெற்று தந்த விசாரணை அதிகாரிகள் மற்றும் இவ்வழக்கில் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலரையும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.ஜோஷ் தங்கையா பாராட்டினார்.