விவசாயிக்கு குரியரில் வந்த வெடிகுண்டு பார்சல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

விவசாயிக்கு குரியரில் வந்த

Sri Kumaran Mini HAll Trichy

வெடிகுண்டு பார்சல் !

தஞ்சையை அடுத்துள்ள ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு பார்சல் மூலம் வெடிபொருட்கள் வந்துள்ளதால்   அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தான் கட்டிய பணத்தை திரும்பித்தருமாறு கேட்டு போலீஸில் புகார் செய்துள்ளதால் தன்னை மிரட்டுவதற்காக இவ் வெடிபொருட்களை திருச்சியில் இயங்கி வரும் அறம் மக்கள் நலச் சங்க நிர்வாகிகள் அனுப்பியிருக்கக் கூடும் என குற்றஞ்சாட்டுகிறார் அவ் விவசாயி;.

திருச்சியிலிருந்து ‘சி. கார்த்திரப்பன், வெள்ளாளத் தெரு, தென்னூர் ஹை ரோடு, திருச்சி’  என்ற பெயரில் புரஃபெஷனல் குரியர்  மூலம் பார்சலில் அனுப்பப்பட்டுள்ள அவ் வெடிபொருட்கள் குறித்து ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தாங்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருணாநிதி. இவரது மகன் அறிவழகன். வயது 28. பொறியியல் பட்டதாரியான அறிவழகன்  விவசாய பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரத்தநாட்டில் செயல்படும் புரஃபெஷனல் குரியர் அலுவலகத்திலிருந்து அறிவழகனை அவரது மொபைலில் தொடர்பு கொண்டு பேசிய நபர், அறிவழகனுக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதை அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

அறிவழகன் அப்போது தஞ்சாவூரில் இருந்ததால், அவரது வேண்டுகோளின்படி, அவரது தந்தை கருணாநிதி மதியம் 3 மணியளவில் குரியர் அலுவலகத்துக்குச் சென்று அப் பார்சலை பெற்று வந்து வீட்டில் வைத்துள்ளார்.

Flats in Trichy for Sale

இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பிய அறிவழகன், இன்று 18.9.2020 காலை அப் பார்சலை பிரித்துப்பார்த்த போது அதில் வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவற்றை வீட்டின் அருகிலுள்ள தென்னந்தோப்பில் கொண்டுபோய் வைத்துவிட்டு இதுபற்றி ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, தஞ்சையிலிருந்து வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் பிரிவு நிபுணர்கள் விரைந்து வந்து அவற்றைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ஒரு சிறு மின் ஒயருடன் இணைக்கப்பட்ட எலக்ட்ரிக்  டெட்டனேட்டர், ஒரு ஜெலட்டின் குச்சி ஆகியவை இருப்பது தெரிய வந்தது.

இவை பாறைகளை வெடிக்கச் செய்ய விவசாயிகளால் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் என்கின்றனர் போலீஸார். “இவை மின் இணைப்பு இருந்தால் மட்டுமே; வெடிக்கக்கூடடியவை. நாட்டு வெடிபொருட்களைப் போல உராய்வினால் வெடிப்பவை அல்ல. எனவே இவற்றால் எந்தவித ஆபத்தும் இல்லை,” என்கிறார் தனது பெயரை வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி.

 

இவ் வெடிபொருட்களை அறம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான ரமேஷ், ராஜா ஆகியோர் தான் அனுப்பியிருப்பார்கள் என குற்றஞ்சாட்டுகிறார் அறிவழகன்.

அந் நிறுவனத்தில் ரூ54 லட்சம் வரை முதலீடு செய்துள்ளதாகவும், தற்போது அப் பணத்தை திருப்பித்தர அந்நிறுவனத்தினர் மறுத்ததால் அதன் நிர்வாகிகள் மீது தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செப்டம்பர் 5-ம் தேதி புகார் மனு கொடுத்துள்ளதாவும், அதனால் தன்னை மிரட்டுவதற்காக இவ் வெடிபொருட்களை அவர்கள் அனுப்பியிருக்கக் கூடும் என்கிறார் அறிவழகன்;.

இந்நிலையில், அறம் மக்கள் நலச் சங்க நிர்வாகிகளைப் பழிவாங்குவதற்காக இவ் வெடிபொருட்களை அறிவழகனே பார்சல் மூலம் அனுப்பிவைத்து நாடகமாடுவதற்கு வாய்ப்பு உண்டு என்கின்றனர் போலீஸார்.

அறிவழகன்  இசிஇ பொறியியல் பட்டதாரி என்பதால் இவ் வெடிபொருட்கள் மின் இணைப்பு உதவி இல்லாமல் வெடிக்காது என்பதும், இவற்றால் ஆபத்து இல்லை என்பதும் அவருக்கு தெரியும் என்கின்றனர் போலீஸார்.

அறம் மக்கள் நலச் சங்க நிறுவனத்தில் தனது சார்பில் ரூ54 லட்சம் வரை முதலீடு செய்துள்ள அறிவழகன், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து சுமார் ரூ1.5 கோடி வசூல் செய்து அந்நிறுவனத்தில் கொடுத்துள்ளார் எனத் தெரிகிறது.

எனவே பணத்தை திருப்பி தராமல் இழுத்தடிக்கும் அறம் மக்கள் நலச் சங்க நிர்வாகிகளைப் பழிவாங்கும் எண்ணத்தில் அறிவழகனே இந்த பார்சலை தனக்கு தெரிந்த நபர் மூலம் திருச்சியிலிருந்து அனுப்பியிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.