தூத்துக்குடி – அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகள் – கண்ணீர் விடும் விவசாயிகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளப் பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் நாளுக்குநாள் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. மானாவரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிர்களை சேதப்படுத்துவது மட்டுமின்றி ஆங்கங்கே விவசாயிகளையும் காட்டுப்பன்றிகள் தாக்கி வரும் சூழ்நிலை உள்ளதால் விவசாய நிலத்திற்கு செல்லவே அச்சமாக உள்ளது என கண்ணீர் விடும் விவசாயிகள்.
இந்தச்சூழ்நிலையில் கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1500 ஏக்கர் வரை விவசாயிகள் பயிரிட்ட மக்காச்சோளம் கதிர் நல்ல விளைச்சல் தொடங்கியுள்ள நிலையில் காட்டுப்பபன்றிகளின் தொல்லையினால் மக்காச்சோள பயிர்கள் முற்றிலும் சேதமைடந்துள்ளதால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் ஆனால் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்குவது மட்டுமின்றி, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
பேட்டி :
1.தங்கராஜ் 2.மாடசாமி
–மணிபாரதி.