அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குத்தகை நிலத்தை பொது ஏலம் விடுவதைக் கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

 குத்தகை நிலத்தை
பொது ஏலம் விடுவதைக் கண்டித்து
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

காலங்காலமாக குத்தகை எடுத்து சாகுபடி செய்துவரும் நிலத்தை பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மேலவீதி அரண்மனை தேவஸ்தான அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தஞ்சாவூர் மாரியம்மன்கோவில் அருகேயுள்ள அருள்மொழிப்பேட்டை கிராமத்தில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான 237 ஏக்கரில் அப்பகுதியைச் சேர்ந்த 150 விவசாயிகள் மன்னர்கள் காலம் முதல் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆண்டு குத்தகையாக ஒவ்வொரு விவசாயியும் தலா எட்டரை மூட்டைகள் செலுத்தி வந்தனர். இதற்கு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் ரசீது வழங்கி வந்துள்ளது.

https://www.livyashree.com/

இந்நிலையில் இந்நிலங்களை பொது ஏலம் விடப்போவதாக இந்து சமய அறநிலையத்துறையினர் குத்தகை விவசாயிகளுக்கு ஜுன் 19-ஆம் தேதி நோட்டீஸ் கொடுத்தனர்.

குத்தகை பாக்கி உள்ள விவசாயிகளுக்கு இந்த ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என அந் நோட்டீஸில் கூறியுள்ளனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதற்கு குத்தகை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த ஏலமுறையை கைவிடக்கோரி தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அலுவலகத்தில் உதவி ஆணையர் கோ.கவிதா உள்ளிட்ட அலுவலர்களிடம் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்கள் பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காடும் மேடுமாக இருந்த நிலங்களை காலங்காலமாக சீர்படுது;தி சாகுபடி செய்து குத்தகை செலுத்தி வந்தோம்.

இந்நிலையில் இந்நிலங்களை ஏலம் விடுவதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே ஏலம் விடுவதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், நீதிமன்ற உத்தரவின்படியும் அரசு வழிகாட்டுதலின்படியும் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அதை மீறி எதுவும் செய்ய முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறத்தி அரண்மனை தேவஸ்தான அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.