கரும்புகளை ஏந்தியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கரும்புகளை ஏந்தியவாறு
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கடந்த 8 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்ம் மற்றும்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கரும்புகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் அமைந்துள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையின் முந்தைய நிர்வாம் கடந்த 2015 முதல் 2018 வரை கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.115 கோடியை வழங்காததுடன் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டது.
அதோடு, ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளின் பெயரில் மோசடியாக பல கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் கடன் பெற்றுள்ளது அதன் பின்னரே விவசாயிகளுக்கு தெரிய வந்தது.
தங்களை மோசடி செய்த ஆலை நிர்வாகத்தைக் கண்டித்தும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி வலியுறுத்தியும் கடந்த 8 மாதங்களாக கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க காசிநாதன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் கரும்புகளை ஏந்தியவாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.