அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி கரும்புகளுடன் முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி கரும்புகளுடன் முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது
மதுரை மாவட்ட அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டதுஇதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்சர்க்கரை ஆலை திறப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனால் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுதொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்