மதுரையில் தமிழ்நாடு அரசு கழக ஓய்வு பெற்றோர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் 

0

மதுரையில் தமிழ்நாடு அரசு கழக ஓய்வு பெற்றோர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் 

4 bismi svs

86 மாதங்களாக அகவிலைப்படி வழங்காமல் நவம்பர் 20-ம் தேதி நீதிமன்ற தீர்ப்பின் மீது அரசும் ஓய்வூதிய நம்பகமும் செய்த மேல் முறையீடு அநீதியை கைவிடவும் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வை வழங்கவும்
ஏப்ரல் 2021 முதல் பணி ஓய்வு விருப்ப ஓய்வு பணிக்காலத்தில் மரணம் அடைந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை கடந்த 22 மாதங்களாக வழங்காமல் உள்ளதை கண்டித்து இனியும் காலம் கடத்தாமல் உடனே வழங்க கோரியும்
மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் கடத்துவதைக் கண்டித்து மதுரை பைபாஸ் சாலையில் உள்ள மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் தேவராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் மதுரை விருதுநகர் திண்டுக்கல் தேனி ஆகிய பகுதியிலிருந்து உள்ள ஏராளமானோர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் பெண்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் கைது செய்தனர் இந்த போராட்டத்தினால் மதுரை பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேற்பட்டவர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

-ஷாகுல் படங்கள்: ஆனந்த்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.