பார்க்கவே எவ்வளவு மகிழ்வை தருகிறது?
திருச்சிராப்பள்ளி புத்தகத் திருவிழா சென்றாண்டில்(2025) நடந்திருக்க வேண்டியது, இந்த நடப்பு ஆண்டின் துவக்கத்திலேயே நடந்து முடிந்திருக்கிறது…
திருவிழா குறித்த ஏராளமான ஒளிப்படங்களை முகநூல் பக்கங்களில் அதிகளவு காண முடிந்தது, புத்தக வெளியீடு, புத்தக அறிமுகம், எழுத்தாளர்களுக்கு பாராட்டு, போன்ற ஒளிப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தார்கள்.. அதில் என்னை கவர்ந்த ஒளிப்படம் தான் இந்தப் படம்.
குழந்தைகள் உணவு உண்பதற்கும், அதன் அழுகையை நிறுத்துவதற்கும், தங்களின் வேலை பாதிப்படையாமல் இருப்பதற்கு, குழந்தைகளை ஒரே இடத்தில் அமர வைத்து, அதன்கைகளில் அலைபேசியை கொடுத்து தேவையற்ற காட்சிகளை மனதில் பதிவு செய்து அவை சார்ந்த சிந்தனைகளையும், கவனத்தில் நிரப்புகிற … பெற்றோர்கள் மத்தியில், யாரோ ஒரு தாய் தன் குழந்தைக்கும், புத்தகத்திற்கும் உறவை வளர்ப்பதற்கான ஒர் பணியாக, குழந்தை அழைத்து வந்து புத்தக அரங்கில் உலாவ விடுவதென்பது, இன்றைய சூழலில் மிகவும் போற்றக்கூடிய செயல்… அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும், அதை ஒளிப்படமாக எடுத்தவருக்கும் என் வாழ்த்தும் பாராட்டும்..
— திருவைக்குமரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.