மகனின் காதலியிடம் ரூ 50 லட்சம் கேட்டு மிரட்டிய தந்தை !
காதலித்து கற்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மகன் மறுத்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 50 இலட்சம் கேட்டு மிரட்டிய புகாரில் அப்பெண்ணை காதலித்து ஏமாற்றிய நபரின் தந்தையை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த அந்த பாதிக்கப்பட்ட பெண் மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். மதுரை நிலையூர் பகுதியை சேர்ந்த அஜய் என்பவர் தன்னை காதலித்து வந்ததாகவும்; இருவரும் நெருக்கமாக பழகியதில் தான் கருவுற்றாகவும்; அதன்பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்ததாகவும்; இந்நிலையில், இதனையறிந்த அஜயின் தந்தை ராஜசேகர் மற்றும் தாயார் விக்டோரியா ஆகியோர் தன்னை தொலைபேசியில் மிரட்டியதாக ஆடியோ ஆதாரத்தோடு புகார் அளித்திருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
“என் மகன் உன் கழுத்தில் மாலையிட வேண்டுமென்றால், எங்களுக்கு 50 இலட்சம் வரதட்சனையாக கொண்டு வர வேண்டும் என்றும்; அவ்வாறு முடியாத பட்சத்தில் கருவை கலைத்துவிட்டு வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிடு என்றும் தேவையில்லாமல் பிரச்சினை செய்யாதே என்றும்” தகாத வார்த்தைகளால் திட்டியதாக அந்த பெண் அளித்த புகார் அளித்ததையடுத்து, விசாரணை நடத்த விளக்குத்தூண் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் உத்தரவிட்ட நிலையில், புகாரில் முகாந்திரம் இருப்பதையறிந்து அப்பெண்ணை ஏமாற்றிய அஜய் மற்றும் அவரது பெற்றோர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.