ZEE5-ல் ‘செருப்புகள் ஜாக்கிரதை’. இதை பார்ப்பவர்கள் ஜாக்கிரதை!
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5-ல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது ‘செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற காமெடி வெப் சீரிஸ். S Group சார்பில் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், விவரம் கடைசி பேராவில் உள்ளது. எத்தனை எபிசோட் இருக்குன்னு தெரியல. ஆனால் பிரஸ் பீப்பிளுக்காக இரண்டு எபிசோடுகளை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் போட்டார்கள். காமெடி என்ற பெயரில் ஒரு மணி நேரம் நம்மை சாகடித்து விட்டார்கள். நல்லவேளைஸ்கீரினிங் முடிந்த பிறகு பிரஸ்மீட் நடந்தது. அதில் பலர் பேசினாலும் சிங்கம்புலி பேச்சும் பாடிலாங்குவேஜும் உண்மையிலேயே கலகலப்பாக இருந்துச்சு . மனசு ரொம்ப ரிலாக்ஸா இருந்துச்சு. எனவே மற்ற சிலரின் பேச்சும் சிங்கம்புலி யின் பேச்சும் கீழே உள்ளது.
ZEE5 கௌசிக் நரசிம்மன்
கடந்த அக்டோபரில் ஐந்தாம் வேதம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது.அந்த சீரிஸுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. இனி தொடர்ந்து ZEE5 ல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி காமெடி சீரிஸ் வரும். அந்த வகையில் செருப்புகள் ஜாக்கிரதை முதல் புராஜக்ட். தொழில் நுட்பக் கலைஞர்கள் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளனர். நடித்த அனைவருக்கும் நன்றி. இது போக வேற வேற ஜானர்களில் ZEE5லிருந்து பல படைப்புகள் வரவுள்ளது”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தயாரிப்பாளர் சிங்காரவேலன்
“இந்தக் கதை சிறப்பாக வர வேண்டும் என்றால் சிங்கம் புலி தான் வேண்டுமென நினைத்தோம், எங்களை நம்பி வந்த சிங்கம்புலி சாருக்கு நன்றி”.
இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ்
“சிங்கம் புலி சார் டாமினேட் செய்வார் என்று சொன்னார்கள். ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை. மிக மிக இனிமையான மனிதர், மிக அருமையாக நடித்துள்ளார்”.
சிங்கம்புலி
“ZEE5 நிறுவனத்திற்கும் தயாரிப்பாளார் சிங்காரவேலனுக்கும் நன்றி. அரசாங்கம் எல்லோரையும் மொத்தமாகப் பால் வாங்கி வைக்கச் சொன்னார்கள் அல்லவா? அப்போது ஆரம்பித்தது இந்த சீரிஸ். இதில் நடித்த அனைவரும் மிகத் திறமையானவர்கள் நன்றாகச் செய்துள்ளார்கள். ZEE5 எங்கள் எல்லோரையும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். செருப்பு, டெட்பாடி, இரண்டை வைத்து மிக அருமையாக காமிக்கலாக இந்தக்கதையை எழுதியுள்ளார்கள். ராஜேஷ் சூசை அற்புதமாக எடுத்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த டீமுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
இந்த சீரிஸில் லொள்ளு சபா மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா, உடுமலை ரவி, பழனி, சேவல் ராம், டாக்டர் பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
— மதுரை மாறன்.