போலியோவிற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது !
2026 – 27-ஆம் ஆண்டிற்கான சர்வதேச போலியோபிளஸ் கமிட்டியின்The International PolioPlus Committee (IPPC) உறுப்பினராக, ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும் இயக்குநர்களில் ஒருவரும் எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரோட்டரி சர்வதேச மாநாட்டிற்கு முன்னதாக, தைபே நகரில் சர்வதேச போலியோ-பிளஸ் குழுவின் (IPPC) நேரடி கூட்டத்தில், IPPC தலைவர் மைக்கேல் மெக்கவர்ன் (Michael McGovern) குழுவின் பதவிக்காலம் நிறைவடையும் உறுப்பினர்களைப் பாராட்டி கௌரவித்ததுடன், 2026-27-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களையும் வரவேற்றார்.
”போலியோவிற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. ரோட்டரி அமைப்பு நமக்கு நினைவூட்டுவது போல, போலியோ முற்றிலும் ஒழிக்கப்படும் வரை அது முடிவுக்கு வந்ததாகக் கருத முடியாது. எனவே, போலியோவை ஒழிப்பதற்கான நமது இலக்கில் உறுதியுடன் இருந்து, அதற்காக அயராது உழைப்போம்.” என்பதாக அறைகூவல் விடுத்திருக்கிறார், எம்.எம்.எம்.முருகானந்தம்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.