18 ஆண்டுகளுக்குப் பின் மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ்!
மலையாளத்தில் புதுமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் டைரக்ஷனில் அங்குள்ள ஹீரோ ஷான் நிகாமுடன் நம்ம ஊரு சாந்தனு பாக்யராஜ் கைகோர்க்கும் படம் ‘பல்டி’. ஆக்ஷன் & அதிரடி த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் மலையாளத்தில் புகழ் பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும் ’சோடா பாபு’ என்ற வெயிட்டான கேரக்டரில் நடிக்கிறார். சந்தோஷ் டி.குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அலெக்ஸ் ஜே.புலிக்கல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த ‘பல்டி’மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் மியூசிக் டைரக்டர் சாய் அபயங்கர். எடிட்டிங் ; சிவகுமார் வி.பணிக்கர், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
2007-ல் வெளியான ‘ஏஞ்சல் ஜான்’ என்ற படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார் சாந்தனு பாக்யராஜ். ”பதினெட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாள சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சியாகவும் புது அனுபவமாகவும் இருக்கு. இப்படத்தில் எனது கேரக்டர் மிகவும் வலுவானது” என்கிறார் சாந்தனு பாக்யராஜ்.
— மதுரை மாறன்