11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்ற சம்பவத்தை கைரேகை வைத்து கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பாராட்டு
மதுரை மாவட்டம் , ஊமச்சிகுளம் உட்கோட்டம் , சிலைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் மலைசாமி என்பவரது புகாரின் அடிப்படையில் சிலைமான் காவல் நிலையத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில் கைவிரல் ரேகை நிபுணர்களால் சம்பவ இடத்தில் கைவிரல் ரேகை சேகரிக்கப்பட்டு ஆவணபடுத்தப்பட்டு தற்சமயம் மதுரை மாவட்ட விரல் ரேகை பதிவேட்டு கூடத்தில் பணிபுரிந்து வரும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் இதர அலுவலர்கள் மூலமாக தற்போது பயன்படுத்தப்பட்டு கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பழைய வழக்குகளில் விரல் ரேகையை ஒப்பிட்டு பார்த்ததில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய குற்றவாளி சேவுகராஜ் த .பெ . திக்விஜயன் என்பவருடைய விரல் ரேகையுடன் ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சிலைமான் வட்ட காவல் ஆய்வாளர் மோகன் , முதுகுளத்தூர் கிளைச்சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வந்த சேவுகராஜை கடந்த ஜன 30 அன்று இவ்வழக்கிற்காக கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து திருடபோன பொருள்களை மீட்க வேண்டி நடவடிக்கை மேற்கெள்ளபட்டனர் .
11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குற்ற சம்பவத்தில் விரல் ரேகை அடிப்படையில் உறுதிசெய்த விரல் ரேகை பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் இதர அலுவலர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சிவபிரசாத் பாராட்டியுள்ளார்.
-ஷாகுல்